Sunday, April 30, 2017


Rajinikanth SS Rajamouliஒரு சில படங்கள் மட்டுமே எதிர்பார்ப்பை எகிற செய்யும் வகையில் உருவாகி, ரசிகர்களை திருப்தியடையச் செய்யும்.


அப்படியான அரிதான ஒரு படம்தான் அண்மையில் வெளியான ராஜமௌலி இயக்கிய பாகுபலி2.

இந்திய சினிமாவில் பல சாதனைகளை படைத்து வரும் இப்படத்தை ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியிருந்தார்.

ரஜினியின் பாராட்டை பெற்ற இயக்குனர் ராஜமௌலி தன் ட்விட்டர் பக்கத்தில்…

தலைவா…. கடவுளே ஆசிர்வதித்துவிட்டதாக நாங்கள் உணர்கிறோம்.
இதைவிட வேறு என்ன வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

இதில் படத்தில் பணியாற்றிய ராணா உள்ளிட்ட கலைஞர்கள் ரஜினிக்கு தங்கள் நன்றியினை தெரிவித்து வருகின்றனர்.

rajamouli ss‏Verified account @ssrajamouli

rajamouli ss Retweeted Rajinikanth
THALAIVAAAA… Feeling like god himself blessed us… our team is on cloud9… Anything couldn’t be bigger…

Baahubali 2 Director SS Rajamoulis reaction to Rajinis Wish

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘டோரா’ படத்தில் அமானுஷ்ய சக்தி மூலம் பழிவாங்கப் படும் 3 வில்லன்களில் ஒருவராக நடித்திருப்பவர் நடிகர் வெற்றி.

அந்த கதாபாத்திர வாய்ப்புக்காக பட்ட பாடு பற்றி கூறிய வெற்றி…

“எனக்குச் சினிமா மீது ஆசை.ஆர்வம், மோகம் உண்டு. எனக்குச் சிறிதளவு வருமானமும் வர வேண்டும்.எனவே நிறைய விளம்பரங்கள், சிறிய படங்கள், டிவி தொடர்களில் டப்பிங் பேசினேன். மேடை நாடக அனுபவங்களும் உண்டு. ஏழு குறும்படங்களில் நடித்திருக்கிறேன்.

‘டோரா’ படத்தில் பானிபூரி விற்பவன் பாத்திரத்துக்கு ஆள் தேடுவதாக அறிந்து இயக்குனர் தாஸ் ராமசாமியிடம் போய் வாய்ப்பு கேட்டேன். எப்படியாவது இந்த வாய்ப்பைப் பெறுவது என்று தீர்மானித்து அசல் பானிபூரிக்காரன் போல என்னை மாற்றிக் கொண்டேன். மறு நாள் இயக்குநரைச் சந்தித்த போது ஒருவழியாக சமாதானம் ஆகி.. நீயே நடி என்றார். இப்படி வந்ததுதான். ‘டோரா’ பட வாய்ப்பு. இதில் நான் புதிய நடிகன். ஆனால் பெரிய ஸ்டாரான நயன்தாரா மேடம் எங்களுடன் எளிமையாகப் பழகினார்” என்றார்.

பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான மதூர் பண்டார்கர் மீது நடிகை பிரீத்தி ஜெயின் கடந்த 2004ம் ஆண்டு கற்பழிப்பு புகார் கொடுத்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2005-ம் ஆண்டு, இயக்குனர் மதூர் பண்டார்கரை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற வழக்கில் நடிகை பிரீத்தி ஜெயின், அவரது கூட்டாளிகள் நரேஷ் பர்தேஷி, ஷிவராம் தாஸ் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கை விசாரித்த மும்பை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், இயக்குனர் மதூர் பண்டார்கரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது நிரூபணமானதால், நடிகை பிரீத்தி ஜெயின் மற்றும் இரண்டு பேருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

நீதிபதி தீர்ப்பு வாசித்த உடனேயே, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி, பிரீத்தி ஜெயின் மனு தாக்கல் செய்தார். மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறினார்.

அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி, பிரீத்தி ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியதுடன், 4 வாரங்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதேபோல் மற்ற இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.


கார் விபத்தில் வங்காள நடிகை மரணம்: நடிகர் படுகாயம்



30 ஏப்,2017 - 15:02 IST






எழுத்தின் அளவு:








பிரபல வங்காள நடிகை சோனியா சிங் சவுகான். பிரபல பெங்காலி டி.வி. தொகுப்பாளரான சோனியா பெங்காலி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். அவர் தற்போது பெங்காலி சேனல் ஒன்றில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் பெங்காலி நடிகர் விக்ரம் சட்டர்ஜி கலந்து கொள்வதாக இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்காக கொல்கத்தாவில் இருந்து புறநகரில் உள்ள ஸ்டூடியோவிற்கு சோனியாவும், விக்ரம் சட்டர்ஜியும் காரில் சென்று கொண்டிருந்தனர். கொல்கத்தாவின் லேக்மால் என்ற இடத்தில் கார் வேகமாக வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் செல்பவர்கள் மீது மோதிவிடமால் இருக்க காரை திருப்பியல் அது நிலை நடுமாறி கவிழ்ந்தது. இதில் சோனியா, விக்ரம் சட்டர்ஜி இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சோனியா ஏற்கெனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். விக்ரம் சட்டர்ஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து கொல்கத்தா போலீசார் வழக்கு பதவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து சம்பவம் பெங்காலி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சிவகுமாரை தாதாவாக்கிய வண்டிச்சக்கரம்



30 ஏப்,2017 - 15:37 IST






எழுத்தின் அளவு:








சிவகுமார் என்றால் நல்லவர் என்ற இமேஜ்தான் தமிழ் நாட்டில் இருந்தது. காரணம் அவர் பாசிட்டிவான கேரக்டர்களையே தேர்ந்தெடுத்து நடிப்பார். அவரது கேரியரில் புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பிறகு ராமன் பரசுராமன் படத்தில் இரட்டை வேடத்தில் ஒரு சிவகுமார் வில்லன். மற்றபடி அவர் வில்லனாக அதிகமாக நடித்ததில்லை. இன்றைக்கு எல்லா நடிகர்களுமே தாதவாக நடித்து விட்டார்கள். சிவகுமார் தாதாவாக நடித்த படம் வண்டிச்சக்கரம்.
களையான முகம் தாதா கேரக்டருக்கு செட்டாகுமா என்று பலரும் யோசித்தபோது சரியாக வரும் என்று அடித்துச் சொன்னவர் வினுசக்ரவர்த்தி. அவர்தான் கதை, திரைக்கதை வசனம் எழுதியவர். விஜயன் இயக்கினார். அதேபோல தான் அடுத்து இயக்க இருந்த படத்தில் நாயகியாக நடிக்க தேர்வு செய்து வைத்திருந்த விஜயலட்சுமி என்பவரை இந்தப் படத்தில் சாராய கடையில் வேலை பார்க்கும் சில்க் என்ற கேரக்டரில் நடிக்க வைத்து அவரை சில்க் ஸ்மிதாவாக மாற்றியவரும் வினு சக்ரவர்த்திதான்.
மார்க்கெட்டில் கந்து வட்டி வசூலிக்கும் தாதா சிவகுமாரை அதே மார்க்கெட்டில் சாப்பாட்டு கூடை சுமக்கும் சரிதா நல்லவனாக மாற்றுகிற கதை. கிட்டத்தட்ட புதிய பாதை படத்தின் முன் கதை என்று சொல்லாம். அமைதியாக நடிக்கும் சிவகுமார் ஆர்ப்பாட்டமாக நடித்த படம். சிறந்த நடிகருக்கான விருதுகள் பல இந்தப் படத்தின் மூலம் சிவகுமாருக்கு கிடைத்தது. 1980ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியும் பெற்றது.



என் வாழ்க்கையை மாற்றிய படம் பாகுபலி : ராணா



30 ஏப்,2017 - 14:35 IST






எழுத்தின் அளவு:








பாகுபலி முதல் பாகத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான பாகுபலி 2 படமும் பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது. பாகுபலி 2 க்கு ரசிகர்கள் இடையே கிடைத்துள்ள வரவேற்பால் நடிகர் ராணா டங்குபதி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ராணா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பாகுபலி என்னை சினிமா வாழ்க்கையையே மாற்றிய படம். பாகுபலி 2 ம் பாகத்தால் நிச்சயமாக எனது மார்க்கெட் வால்யு உயர்ந்துள்ளது. இப்போது ஏராளமான பட வாய்ப்புக்களில் ஒப்பந்தம் ஆகி உள்ளேன்.

வேறு வேறு மொழிகளில் மாறுபட்ட கதைகளை கேட்டு வருகிறேன். பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இதற்கு முன் இது போன்ற பட வாய்ப்புக்கள் கிடைப்பது எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. ரசிகர்களுக்கும் இப்போது என் மீது நம்பிக்கை வந்துள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து ஏராளமான பட நிறுவனங்களும், இயக்குனர்களும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



சீரியலில் முத்தக்காட்சியில் நடிப்பது தவறாக தெரியவில்லை! -சொல்கிறார் ஜனனி



30 ஏப்,2017 - 11:55 IST






எழுத்தின் அளவு:








விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை சீரியலில் முத்தக்காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருப்பவர் நடிகை ஜனனி. சீரியல்களில் ரொமான்ஸ் காட்சிகளில் முதன்முதலாக லிமிட் தாண்டப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலை யில், கதாபாத்திரத்திற்காக முத்தக்காட்சிகளில் நடிப்பது தவறில்லை என்கிறார் ஜனனி.

அதுகுறித்து அவர் கூறுகையில்,

நான் கோவையிலுள்ள ஒரு சேனலில் தொகுப்பாளினியாக சில வருடம் ஒர்க் பண்ணிட்டு அதன்பிறகு 3 ஆண்டுகள் ஐடி பீல்டுக்கு சென்று விட்டேன். அதையடுத்துதான் இந்த மாப்பிள்ளை சீரியலில் கமிட்டானேன். இந்த சீரிய லுக்கு நேயர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்துள்ளது. முக்கியமாக, என்னை சந்திக்கும் நேயர்கள் சிலர், முத்தக்காட்சியில் நடித்தது பற்றி கேட்கிறார்கள். இதுவரை சீரியல்களில் யாரும் இந்த மாதிரி நடிக்கவில்லை என்பதால் அவர்கள் அப்படி கேட்கிறார்கள்.

ஆனால் என்னிடம் அந்த கேரக்டர் குறித்து டைரக்டர் சொன்னபோது, ஒரு மாடர்ன் கேர்ள், முற்போக்கு சிந்தனை கொண்ட பெண். வீட்டில் இருக்கும்போது ஷாட், டீசர்ட் அணிவாள், வெளியில் செல்லும்போது ஜீன்ஸ், சேலை அணிவாள். மொத்தத்தில் ஒரு போல்டான பெண் என்று கூறி விட்டார். ரொமான்ஸ் காட்சிகளில் காதலனுக்கு முத்தமும் கொடுப்பாள். இதற்கு எதிர்மறையான விமர் சனங்கள் வரும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எல்லாவற்றையும் முன்பே சொல்லிவிட்டார்.

எனக்கு அந்த கேரக்டர் பிடித்திருந்தது. அதனால்தான் அந்த கேரக்டருக்கு எந்தமாதிரியெல்லாம் நடிப்பு தேவைப்படுகிறதோ அதை வெளிப்படுத்த தயாரானேன். முக்கியமாக, முத்தக்காட்சியில் நடித்தேன். அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்காகவே அப்படியெல்லாம் நடிக்கிறேன். எனக்கு இது தவறாக தோன்றவில்லை. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதேசமயம், டிரஸ்ஸைப்பார்த்து ஒரு பெண்ணை ஜட்ஜ் பண்ணினா அவங்க தப்பானவங்களாத்தான் இருப்பாங்க. எங்கிட்ட யாரும் தப்பா நடந்துக்க முடியாது. கரைக்ட்டா இருப்பேன். அந்த மாதிரியான ரோல். எனக்கு இது தவறாக தெரியவில்லை. அந்த கேரக்டராக நான் மாறியிருக்கிறேன் அவ்வளவுதான்.

மேலும், இந்த சீரியலில் எனது நடிப்பைப் பார்த்து விட்டு சிவகார்த்திகேயன், விஷ்ணு நடிக்கிற படங்களில் எனக்கு தோழி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத் துள்ளது. எதிர்காலத்தில் சீரியல்களில் நடித்துக்கொண்டே சினிமாவில் அழுத்த மான கேரக்டர்களில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன். சினிமா இரண்டறை மணி நேரம்தான். பின்னர் மறந்து விடுவார்கள். ஆனால் சீரியல் அப்படியல்ல தினமும் வீடு தேடிச்சென்று நேயர்களின் மனதில் நிறக்கக்கூஷய நல்லதொரு பிளாட்பாரத்தை அமைத்துக்கொடுக்கிறது. அதனால் சீரியல்களுக்குதான் எப்போதுமே முதலிடம் கொடுப்பேன் என்கிறார் ஜனனி.


Velaikaran and Spyder movie release updatesமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘வேலைக்காரன்’.


இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை மே 1ஆம் தேதியும் படத்தை ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதியும் வெளியிடவிருந்தனர்.


ஆனால் தற்போது பர்ஸ்ட் லுக்கை ஜூன் 5ஆம் தேதியும், படத்தை செப்டம்பர் 29ஆம் தேதியும் வெளியிடவுள்ளனர்.


இந்நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்டைர் படத்தை ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியிட உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.


Velaikaran and Spyder movie release updates


கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன் -ரேவதி



30 ஏப்,2017 - 11:03 IST






எழுத்தின் அளவு:








ஒஸ்தி, அம்மா கணக்கு படங்களில் நடித்த மாஜி ஹீரோயின் ரேவதி, இந்தியில் 2013ல் கங்கனா ரணாவத் நடித்து வெளியான குயின் படத்தை தமிழில் ரீமேக் செய்யப்போவதாக கூறப்பட்டது. நடிகை சுகாசினி வசனம் எழுதும் அப்படத்தில் தமன்னா நாயகியாக நடிக்கயிருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பு வரை கூறப்பட்டது. ஆனால் பின்னர் அந்த படம் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், தனுஷ் இயக்கிய ப.பாண்டி படத்தில் ராஜ்கிரணின் காதலியாக நடித்தார் ரேவதி. அப்படத்தில் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. அதனால் தற்போது ரேவதியை தேடி சில புதிய படங்கள் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால், அப்படி தன்னை தேடிவந்த டைரக்டர்களிடம், கதையை முதலில் சொல்லிவிட்டு செல்லுங்கள். சிறிது கால அவகாசத்துக்குப் பிறகுதான் இந்த கதையில் நான் நடிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி நான் முடிவு சொல்வேன் என்று கூறி அனுப்புகிறார் ரேவதி.

முக்கியமாக, எனக்கு நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. அவ்வப்போது ஓரிரு படங்களில் நடித்தாலும் நான் நடிக்கிற கதாபாத்திரம் என்னையும் ரசிகர்களையும் கவர வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே நடிப்பேன் என்கிறாராம் ரேவதி.


Saturday, April 29, 2017

‘பாகுபலி-2’ படம் அதிரடி சாதனை படைத்துள்ளது.

நடிகர்கள் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், நடிகைகள் ரம்யாகிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா நடித்த ‘பாகுபலி-2’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

இது பாகுபலி-1 படத்தின் தொடர்ச்சி என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இதனால் முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். நேற்று படம் வெளியான தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.

உலகம் முழுவதும் வெளியானாலும் ஆந்திராவில் பிரபாஸ், ராணா ரசிகர்கள் திருவிழாக்கோலம் பூண்டு இருந்தனர். சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணன் நடித்ததால் தமிழ்நாட்டிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் கதாநாயகன் பிரபாஸ் என்றாலும் சத்யராஜ் படம் போல் ஆரம்பம் முதல் இறுதிவரை இடம் பெற்றுள்ளார்.

`பாகுபலி’ முதல் பாகத்தில் ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார்’ என்ப தற்கு `பாகுபலி 2′-ல் விடை கிடைக்கும் என படம் முடிவடைந்ததால் 2-ம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

வெளிநாடுகளுக்கு இணையான ‘கிராபிக்ஸ்’ தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டதால் 2 ஆண்டுகளாக படம் தயாரிப்பில் இருந்தது. இதனால் ரசிகர்கள் 2 வருடம் காத்திருந்தனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஆங்கில படம் பார்ப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி.

உலகம் முழுவதும் 9,000 தியேட்டர்களில் பாகுபலி-2 ரிலீஸ் ஆனது. முதல் நாளில் மட்டும் இந்த படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

`பாகுபலி-2′ படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 3 மொழிகளில் வெளியாகியுள்ளது. இதில் இந்தியில் மட்டும் முதல் நாளில் ரூ.40 கோடிக்கு வசூலாகி உள்ளது. இவை அனைத்துமே ஆன்லைன் முன்பதிவு மூலம் விற்பனையான டிக்கெட் வசூல் ஆகும். ஆன்லைனில் முதல்நாளில் ஒரு வினாடிக்கு 12 டிக்கெட்டுகள் வீதம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 650 தியேட்டர்களில் பாகுபலி-2 ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் முதல்நாளில் ரூ.13 கோடி வசூலாகி உள்ளது. கேரளாவில் 300 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி முதல்நாளில் ரூ.5 கோடி வசூலித்து கொடுத்துள்ளது.

மலையாளம் அல்லாத பிற மொழிப்படம் கேரளாவில் ஒரே நாளில் ரூ.5 கோடி வசூலித்து இருப்பது புதிய சாதனையாகும்.

ஆந்திராவில் `பாகுபலி-2′ படம் பார்க்க காலை 6 மணிக்கே ரசிகர்கள் கூட்டம் கூடியது. ஐதராபாத்தில் ஆன்லைன் முன்புதிவு தொடங்கியதும் ரசிகர்கள் அனைவரும் செல்போன்களில் டிக்கெட்டுகளை போட்டி போட்டு முன்பதிவு செய்தனர். ஆந்திரா, தெலுங்கானாவில் 1000 தியேட்டர்களில் `பாகுபலி’ ரிலீஸ் செய்யப்பட்டு முதல் நாளில் ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை வசூலானது.

கர்நாடகத்தில் 400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. பெங்களூரில் 95 சதவீத தியேட்டர்களில் `பாகுபலி-2′ படம் ஓடியது. இங்கு தெலுங்கு மொழியில் படம் வெளியானது.

பெங்களூர், மும்பையில் ஆன்லைனில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் கள்ள மார்க்கெட்டில் ரூ.1000, ரூ.1,500, ரூ.2,000 என ரகசியமாக விற்கப்பட்டது.

வெளிநாடுகளில் 1000 தியேட்டர்களில் `பாகுபலி-2′ படம் ரிலீஸ் ஆனது. நாளை வரை 3 நாளில் மொத்தம் ரூ.240 கோடி வரை முன்பதிவு மூலம் வசூலாகி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் படம் ‘2.0’. நவீன தொழில் நுட்பத்துடன் பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தின் கதை, காட்சிகள் உள்பட அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘2.0’ அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் மற்றும் பிரமாண்ட காட்சிகளின் வடிவமைப்பு போன்ற பணிகளுக்கு அதிக நாட்கள் தேவைப்படுவதால் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தில் நடித்திருக்கும் பாத்திரங்களுக்கான ஆடை வடிவமைப்பு எவ்வாறு உருவானது என்பது பற்றி தெரிவித்த எமிஜாக்சன்…

“இந்த படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்கள் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றார்கள். அங்கு அவர்களை ‘மோல்ட்’ எடுத்து அதன்பிறகு, அதற்கு ஏற்ப ஆடைகள் வடிவமைக்கப்பட்டன. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித்துவமான தோற்றம் இருக்கும்படி ஆடைகள் உருவாக்கப்பட்டன. இதில் இயக்குனர் ‌ஷங்கர் அதிக அக்கறை செலுத்தி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.


நெருக்கமான காட்சி... - பிரியங்கா என்ன சொல்கிறார்



29 ஏப்,2017 - 14:55 IST






எழுத்தின் அளவு:








பாலிவுட்டில் நிறைய படங்களில் கிளாமராக நடித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா, ஆனால் இப்போது ஹாலிவுட் வரை சென்றுவிட்டதால் கிளாமர் விஷயத்தில் இன்னும் கொஞ்சம் எல்லையை தாண்டிவிட்டார். ஹாலிவுட் படத்தை விட அவர் நடித்து வரும் ஹாலிவுட் சீரியலான குாண்டிகோ-வில், சகநடிகருடன் படு நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரியங்கா சோப்ராவிடம் இதுப்பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது...

இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது, மக்கள் இங்குள்ள ஹிந்தி படங்களை பார்த்தது இல்லையா...? குவாண்டிகோ சீரியலில் ஒரே ஒரு வித்தியாசம், எனது பாய்பிரண்டு வெள்ளக்காரர். ஹிந்தி படங்களில் எப்படி நடித்தேனோ அப்படி தான் இந்த சீரியலிலும் நடித்திருக்கிறேன். கதைக்கு அப்படி ஒரு காட்சி தேவைப்பட்டது, நான் ஒரு நடிகை, படத்திற்கு என்ன தேவையோ நடிக்க வேண்டும். எனக்கு என்று ஒரு எல்லை வைத்திருக்கிறேன், அதை நிச்சயம் மீறமாட்டேன். எல்லா படங்களிலும் நான் இதை கடைபிடிக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.



தனுஷ் பாணியில் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் விஜய்..?



29 ஏப்,2017 - 16:46 IST






எழுத்தின் அளவு:








தமிழில் உள்ள இளம் முன்னணி நடிகர்களுக்கு மலையாள சினிமா மற்றும் அதன் கதைகள் மீதான ஆர்வம் இருந்தாலும் மலையாளத்தில் நேரடியாக ஒரு படத்தில் நடிப்பது என்றால் தயங்கவே செய்கிறார்கள். தனுஷ் மட்டும் போனால் போகிறது என ஒரு காரியம் செய்தார். விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் ஒப்பிட்டால் தனுஷுக்கு மலையாள திரையுலகில் ரசிகர்களின் வரவேற்பு ஒரு படி கம்மிதான். ஆனால் மலையாளத்தில் மம்முட்டி-திலீப் நடித்த 'கம்மத் & கம்மத்' படத்தில் நடிகர் தனுஷாகவே சில நிமிடங்கள் மட்டுமே வரும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் தனுஷ்..

அதாவது மம்முட்டி-திலீப் ஆரம்பித்த புதிய ஹோட்டலை திறந்து வைக்க நடிகர் தனுஷ் வருவதாக காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.. தற்போது இதே பாணியில் விஜய்யும் மலையாளத்தில் ஒரு படஹ்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய்யாகவே நடிக இருக்கிறார் என மலையாள திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.. அதற்கேற்ற மாதிரி படத்தன் டைட்டிலும் கதையும் படத்தில் விஜய்யின் தேவை இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன.

ஆம்.. படத்தின் பெயர் 'போக்கிரி' சைமன்'.. இதில் தீவிரமான விஜய் ரசிகராக நடிக்கிறார் நடிகர் சன்னை வெய்ன்.. கதைப்படி கேரளாவிற்கு ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்ச்சிக்கு விஜய் வருவது போலவும், அவரிடம் போக்கிரி சைமனான சன்னி வெய்ன் முண்டியடித்துக்கொண்டு சந்தித்து போட்டோ எடுத்து பாராட்டு வாங்குவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றனவாம். அதனால் விஜய்யை இந்தப்படம் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிற்குள் இழுத்து விட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளார்களாம்.