10ஆம் வருட கொண்டாட்டத்தில் மம்முட்டியின் 'பிக் பி'..!
14 ஏப்,2017 - 16:01 IST
பத்து வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பிய படம் தான் 'பிக் பி'. அமல் நீரத் இயக்கிய இந்தப்படம் மம்முட்டி நடித்த டான் வரிசை படங்களில் மிக முக்கியமானது. இந்தப்படத்தின் மேக்கிங்காகவே மம்முட்டி ரசிகர்களால் பலமுறை பார்த்து ரசிக்கப்பட்டது 'பிக் பி'. இந்தப்படத்தின் இயக்குனர் அமல் நீரத் மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிரும் இந்தப்படத்தில் தான் அறிமுகமானார்.
அதுமட்டுமல்ல, தமிழ் நடிகர்கள் பாலா, பசுபதி மற்றும் விநாயகன் ஆகியோரின் சிறந்த நடிப்பை இந்தப்படம் வெளிக்கொண்டு வந்தது. மம்முட்டியை வைத்து இந்த 'பிக் பி' படம் மூலம் இயக்குனராக மாறிய அமல் நீரத், இதோ இப்போது துல்கர் சல்மானை வைத்து 'காம்ரேட் உன் அமெரிக்கா' என்கிற படத்தை இயக்கி வரும் மே மாதம் ரிலீஸ் செய்யவும் போகிறார். அந்தவகையில் கடந்த இரண்டு வாரங்களில் தொடர்ந்து மம்முட்டியின் இரண்டு படங்கள் ரிலீசானாலும் கூட, ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த 'பிக் பி' படத்தின் 10ஆம் ஆண்டு கொண்டாட்டத்தையும் கொண்டாடி வருகிறார்கள்.
0 comments:
Post a Comment