Saturday, April 15, 2017

பேகம் ஜான் முதல்நாளில் ரூ.3.94 கோடி வசூல்


பேகம் ஜான் முதல்நாளில் ரூ.3.94 கோடி வசூல்



15 ஏப்,2017 - 15:53 IST






எழுத்தின் அளவு:








பெங்காலியில் வெளியான ராஜ்காஹினி படத்தை பாலிவுட்டில் பேகம் ஜான் என்ற பெயரில் ரீ-மேக் செய்துள்ளனர். வித்யாபாலன் முதன்மை ரோலில் நடித்திருக்கிறார். ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார். பாலியல் தொழில் செய்யும் வித்யாபாலன், தான் வாழ்ந்த வீட்டை காப்பாற்ற போராடும் கதை. இப்படம் நேற்று வெளியாகியுள்ளது. படம் வெளியான முதல்நாளில் ரூ.3.94 கோடி வசூலித்திருக்கிறது. படத்திற்கு நெகட்டீவ்வான விமர்சனங்கள் வந்திருப்பதால் படத்தின் வசூல் குறையும் என்று கூறப்படுகிறது. படம் சுமார் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. ரூ.30 கோடி வசூலித்தால் கூட லாபம் தான் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். அதை எட்டுமா...? வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்...!


0 comments:

Post a Comment