Saturday, April 1, 2017

முதல் நாளில் ரூ.5.12 கோடி வசூலித்த ‛நாம் ஷபானா'


முதல் நாளில் ரூ.5.12 கோடி வசூலித்த ‛நாம் ஷபானா'



01 ஏப்,2017 - 17:12 IST






எழுத்தின் அளவு:








தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்ட நடிகை டாப்சி. பிங்க் படத்தை தொடர்ந்து ‛நாம்ஷபானா' என்ற படத்தில் நடித்துள்ளார். சிவம் நாயர் இயக்கியுள்ளார். டாப்சியுடன், மனோஜ் பாஜ்பாய் முக்கிய ரோலில் நடிக்க, அக்ஷ்ய் குமார் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஆக்ஷ்ன் படமாக வெளியாகியுள்ள இப்படத்தில் டாப்சி, உளவாளியாக நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கு சண்டைகாட்சிகள் எல்லாம் இருப்பதால் நிறைய தற்காப்பு கலைகள் பயின்று நடித்திருக்கிறார். நேற்று வெளியான நாம் ஷபானா படத்திற்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்துள்ளது. முதல் நாளிலேயே ரூ.5.12 கோடி வசூலித்துள்ளது. சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‛நாம் ஷபானா' படம் ஹிந்தி தவிர்த்து தமிழ் உள்ளிட்ட சில மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க சுமார் 2100 தியேட்டர்களில் ரிலீஸாகி இருக்கிறது. வசூல் சிறப்பாக இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


0 comments:

Post a Comment