Saturday, April 1, 2017

ரஜினி-விஜய்-அஜித்-தனுஷ் வர்றாங்க… கமல் வருவாரா..?


kamalhassanஇன்னும் இரண்டு வாரங்களில் அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரை முதல்நாள் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.


தமிழர்களின் இந்த புத்தாண்டில் ரசிகர்களுக்கு விருந்து வைக்க, தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

ரஜினி நடிக்க ரஞ்சித் இயக்கவுள்ள படத்தின் பூஜை மற்றும் சூட்டிங் இந்த நாளில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார் என்பது நாம் அறிந்தமே.

மேலும் தான் முதன்முதலாக இயக்கியுள்ள ப பாண்டி படத்தை அன்று ரிலீஸ் செய்கிறார். (பவர் பாண்டி)

இதே நாளில் அட்லி இயக்கும் விஜய் 61 படத்தின் டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல் அஜித்தின் விவேகம் படத்தின் ஏதாவது ஒரு தகவல் வரும் என எதிர்பார்க்கலாம்.

இத்தனை நடிகர்கள் தங்கள் ரசிகர்கள் விருந்து வைக்கும்போது, கமல்ஹாசன் தரப்பில் இருந்து எதாவது தகவல் வராதா? என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இதே நாளில்தான் ஆர்யாவின் கடம்பன், லாரன்ஸின் சிவலிங்கா ஆகிய படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Will Kamal give any treat to his fan on Tamil new year day

0 comments:

Post a Comment