Sunday, April 16, 2017

கீர்த்தி சுரேஷின் அடுத்த டார்க்கெட் யார் தெரியுமா?


கீர்த்தி சுரேஷின் அடுத்த டார்க்கெட் யார் தெரியுமா?



16 ஏப்,2017 - 09:44 IST






எழுத்தின் அளவு:








ரஜினிமுருகன், பைரவா படங்களின் ஹிட்டுக்குப் பிறகு முன்னணி நடிகையாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் நானியுடன் நீனு லோக்கல் படத்தில் நடித்தவர், தமிழில் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். அதோடு, தமிழ், தெலுங்கில் தயாராகும் மகாநதி படத்திலும் சாவித்ரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் சண்டக்கோழி-2 படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.

ஆக, முன்னணி ஹீரோ படங்கள், முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் என்பதை மனதில் கொண்டு படங்களை செலக்ட் பண்ணி நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் விஜய், சூர்யாவுடன் நடித்து விட்ட நிலையில், அஜித்துடன் மட்டும் இன்னும் நடிக்கவில்லை. அதுபற்றி அவர் கூறுகையில், வளர்ந்து வரும் எல்லா நடிகைகளுக்குமே அஜித்-விஜய்தான் முக்கிய டார்க்கெட்டாக இருக்கும்.

அந்த வகையில், எனக்கு விஜய்யுடன் நடிக் கும் வாய்ப்பு கிடைத்து விட்டது. அதனால் அடுத்தபடியாக அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது அடுத்த டார்க்கெட்டாக உள்ளது. அந்த வாய்ப்பும் கூடிய சீக்கிரமே கைமேல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் கீர்த்தி சுரேஷ்


0 comments:

Post a Comment