வருணை வைத்து படமெடுக்க ஆசைப்படும் தங்கல் டைரக்டர்
16 ஏப்,2017 - 14:43 IST
டைரக்டர் நிதிஷ் திவாரி, அமீர்கானை வைத்து எடுத்த தங்கல் படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. பெயர், புகழுடன் தேசிய விருதையும் பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் வேலைகளை டைரக்டர் நிதிஷ் திவாரி துவக்கி உள்ளார். தனது அடுத்த படத்தில் நடிகர் வருண் தவானை நடிக்க வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் நிதிஷ் திவாரியும், வருண் தவானும் சந்தித்து, இது பற்றி பேசினார்களாம். இந்த புதிய படத்தை ரோனி ஸ்ரீவாலா மற்றும் சித்தார்த் ராய் கபூர் ஆகியோர் தயாரிக்க உள்ளனராம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வருண் தவான், ஜூத்வா 2 படத்திற்காக லண்டன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment