ரஜினியுடன் இவர்கள் தான் நடிக்க வேண்டியது
12 ஏப்,2017 - 13:22 IST
இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இரண்டு படங்கள் பாகுபலி-2 மற்றும் 2.O. இதில் பாகுபலி-2, மற்றுமொரு பிரமாண்டத்தை டிரைலரிலேயே நிரூபித்து விட்டது. இந்தமாதம் படம் ரிலீஸாக இருக்கிறது. மற்றொரு படமான 2.O படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் அக்ஷ்ய் குமார் முக்கிய ரோலில் நடிக்கிறார். முன்னதாக இந்த ரோலில் நடிகர் அமீர்கான் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அவரையும் தாண்டி இரண்டு பேர் இந்த படத்தில் நடிக்க பேசப்பட்டது. அவர்கள் வேறு யாரும் அல்ல சல்மான் கானும், ஹிருத்திக் ரோஷனும் தான்.
அக்ஷ்ய் குமாருக்கு முன்னதாக இவர்களில் ஒருவரை தான் நடிக்க கேட்டிருக்கிறார் லைக்கா சுபாஸ்கரன். ஆனால் சல்மான், ஹிருத்திக் இருவரும் நடிப்பது பற்றி தகவல் சொல்லாமல் இழுத்தடித்து கொண்டே இருந்தார்களாம். இதனால் தயாரிப்பாளர் வெறுத்துபோய், நடிகர் அக்ஷ்ய் குமாரிடம் எதார்த்தமாக பேசினாராம். ஆனால் அவர் உடனே நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம். இதையடுத்தே அக்ஷ்ய் 2.O படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். 2.O படம் வருகிற தீபாவளிக்கு விருந்து படைக்க இருக்கிறது.
0 comments:
Post a Comment