Wednesday, April 12, 2017

தேசிய விருதால் மலையாள நடிகைக்கு ஏற்பட்ட சங்கடம்..!


தேசிய விருதால் மலையாள நடிகைக்கு ஏற்பட்ட சங்கடம்..!



12 ஏப்,2017 - 15:37 IST






எழுத்தின் அளவு:








தேசிய விருது பெறுவது ஒவ்வொரு நடிகைகளுக்கும் அதிகபட்ச லட்சியமா இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.. அப்படி விருது கிடைத்துவிட்டால் முன்பை விட பொறுப்பு கூடிவிடும்.. குத்தாட்ட நடிகைகள் கூட குடும்ப குத்து விளக்காக மாறும் சூழல் உருவாகும்..இன்னொரு பக்கம் பிரியமானி போன்றவர்களுக்கு குருவி தலையில் பனங்காய் வைத்தது போல தேசியவிருது கிடைத்ததும், அதன்பின் அவர் அதிகம் பந்தா காட்டி தன்னை தேடிவந்த வாய்ப்புகள் பலவற்றை இழந்ததும் இன்னொரு விதமானட்ராக்..

ஆனால் சமீபத்தில் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருதுபெற்ற மலையாள நடிகை சுரபி லட்சுமி, மலையாளத்தில் ஒன்றும் மிகப்பெரிய ஹீரோயின் இல்லை.. சொல்லப்போனால் அவர் ஹீரோயினே இல்லை.. கதையின் முக்கியமான் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருபவர்.. இப்போது அவருக்கு கிடைத்துள்ள தேசிய விருது அவரைச்சுற்றி ஒரு ஒளிவட்டத்தை உண்டு பண்ணிவிட்டது..


ஆனால் இதனை பலர் தவறாக கருத்தில் கொண்டு ஏற்கனவே அவர் நடித்தது போன்ற சின்னச்சின்ன கேரக்டர்களில் நடிக்க மாட்டாரா என கேட்டு வருகிறார்களாம். அப்படியெல்லாம் இல்லை தான் முன்பு போல எந்த கேரக்டரிலும் நடிப்பேன் என அவர்களிடம் உறுதி கூறி வருகிறாராம் சுரபி லட்சுமி.. தனக்கு கிடைத்த தேசிய விருதே தனது வாய்ப்புகளுக்கு தடையாக இருந்துவிடக்கூடாதே என்கிற சங்கடத்தில் இருக்கிறார் சுரபி லட்சுமி.

0 comments:

Post a Comment