மோகன்லாலுக்கு வில்லியாக 'மெட்ராஸ் கபே' நாயகி..!
12 ஏப்,2017 - 15:43 IST
தனது ஆஸ்தான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் 'வில்லன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால்.. இந்தப்படத்தில் இவருக்கு ரிட்டையர்டு போலீஸ் அதிகாரி வேடம்.. மேலும் தமிழ் சினிமாவிலிருந்து நடிகர் விஷால் முதன்முறையாக இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.. விஷாலுக்கு இதில் வில்லன் வேடம் என்று சொல்லப்பட்டு வருகிறது..
இந்தநிலையில் இந்தப்படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ரஷி கன்னாவுக்கும் இந்தப்படத்தில் நெகடிவ் கேரக்டர் என்கிற தகவல் கசிந்துள்ளது.. படத்தில் விஷாலுடன் கூட்டு சேர்ந்துகொண்டு மோகன்லாலை எதிர்க்கும் வேடமாம் இவருக்கு. இந்த ரஷி கன்னா 'மெட்ராஸ் கபே என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமாகி, பின் தெலுங்கில் நுழைந்து, தமிழில் தற்போது சித்தார்த்துடன் 'சைத்தான் கி பச்சா' மற்றும், அதர்வாவுடன் 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இப்போது வில்லன் மூலம் மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் ரஷி கன்னா.
0 comments:
Post a Comment