Tuesday, April 11, 2017

இன்று கன்னட நடிகர் ராஜ்குமார் நினைவு தினம்


இன்று கன்னட நடிகர் ராஜ்குமார் நினைவு தினம்



12 ஏப்,2017 - 09:16 IST






எழுத்தின் அளவு:








கன்னட நடிகர் ராஜ்குமார், தமிழகத்தில் உள்ள, ஈரோடு மாவட்டம், கஜனுார் எனும் ஊரில், ௧௯௨௯ ஏப்.,௨௪ல் பிறந்தார். 1945ல், பெதார கன்னப்பா என்ற கன்னடத் திரைப்படத்தில் அறிமுகமானார். அவரது பல திரைப்படங்கள், பல்வேறு மொழிகளில், மொழி மாற்றம் செய்யப்பட்டு வெற்றி கண்டன. மகிஷாசுரமர்த்தினி, பூகைலாசா, கோவதள்ளி சி.ஐ.டி 999, பப்பூருவாகனா உள்ளிட்ட, 200 படங்களில் நடித்துள்ளார்.மொத்தம், 10 முறை பிலிம்பேர் விருது, ஒன்பது முறை சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருது, பத்ம பூஷண் விருது, தாதசாகிப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். 2000ல் சந்தன மரக் கடத்தல் கொள்ளைக்காரன் வீரப்பனால், அவர் கடத்தப்பட்டார். 108 நாட்களுக்குப்பின், அவர் விடுவிக்கப்பட்டார். 2006, ஏப்.,12ல் இதய நோயால் அவர் இறந்தார்; அவர் இறந்த தினம், இன்று.


0 comments:

Post a Comment