அந்த வேடத்தினால் என் பெயர் கெட்டுப் போகவில்லை! -அனுஷ்கா
12 ஏப்,2017 - 09:53 IST
அருந்ததி படத்திற்கு பிறகு மார்க்கெட்டை பிடித்தவர் அனுஷ்கா. அதோடு, ஹீரோக்களுக்கு இணையாக வெயிட்டான கதாபாத்திரங்களையும் சுமக்கக்கூடிய திறமையான நடிகை என்று சிம்பு உள்ளிட்ட பல ஹீரோக்கள் சினிமா மேடை களில் அனுஷ்காவின் நடிப்பு குறித்து பெருமையாக பேசினார்கள். அதற்கேற்ப அருந்ததிக்குப் பிறகு பாகுபலி, ராணி ருத்ரம்மாதேவி போன்ற சரித்திர படங்க ளில் அதிரடியான வேடங்களில் நடித்த அனுஷ்கா, தற்போது பாகுபலி-2விலும் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும், இஞ்சி இடுப்பழகி படத்துக்காக தனது உடல் எடையை 90 கிலோவுக்கு மேல் உயர்த்தி நடித்தார். அந்த அளவுக்கு கேரக்டர்களுக்காக தன்னை முழுமை யாக மாற்றிக்கொள்ளும் அனுஷ்கா, வேதம் படத்தில் விலைமாதுவாகவும் சிறப் பாக நடித்திருந்தார். ஆனால், அந்த சமயத்தில், இந்த மாதிரியான வேடத்தில் நடித்தால் இமேஜ் போய் விடும் என்று சிலர் அவரை அச்சுறுத்தினார்களாம்.
இதை பாகுபலி-2 ஆடியோ விழாவின்போது சொன்ன அனுஷ்கா, என்னைப் பொறுத்தவரை நல்ல கேரக்டர், கெட்ட கேரக்டர் என்றெல்லாம் பார்ப்பதில்லை. எனக்கு அதில் பர்பாமென்ஸ் பண்ண எந்த அளவுக்கு ஸ்கோப் உள்ளது என்பதை மட்டும்தான் கருத்தில் கொள்வேன். அப்படித்தான் இதுவரை நடித்து வருகிறேன். இனிமேலும் அப்படித்தான் நடிப்பேன் என்று சொன்ன அனுஷ்கா, வானம் படத்தில் நடித்த விலைமாது வேடம்கூட எனக்கு நல்ல பெயர்தான் வாங்கித்தந்தது என்கிறார்.
0 comments:
Post a Comment