Wednesday, April 12, 2017

சிவகார்த்திகேயன் பெயருடன் கனெக்ட்டாகும் விஷ்ணு விஷால் படம்

Silkukuvarpatti Singam Sivakarthikeyanஎழில் இயக்கிய ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தை தயாரித்து நடித்தார் விஷ்ணு விஷால்.


காமெடிக்கு பஞ்சமில்லாத இப்படம் வசூலை ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.


இதனையடுத்து மற்றொரு படத்தை தயாரிக்கவிருக்கிறார் விஷ்ணு.


அறிமுக இயக்குனர் செல்லா இயக்க, ரெஜினா கெசண்ட்ரா நாயகியாக நடிக்கிறார்.


இதில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஓவியா. இவர்களுடன் லிவிங்ஸ்டன், சிங்கமுத்து, கருணாகரன், யோகிபாபு, ஆன்ந்த்ராஜ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் டிநக்க, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்


இந்நிலையில் இப்படத்திற்கு ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ என்ற டைட்டில் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ என்ற செல்லப் பெயர் நாயகனுக்கு வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படம் தவிர ‘சின்ட்ரெல்லா’, ‘கதாநாயகன்’, தமன்னா உடன் ‘பொன் ஒன்று கண்டேன்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.


Vishnu Vishal next movie titled Silkukuvarpatti Singam


vishnu oviya regina

0 comments:

Post a Comment