கருப்பு ராஜா வெள்ளை ராஜா கதை என்ன?
12 ஏப்,2017 - 12:38 IST
பிரபுதேவா ஸ்டூடியோ சார்பில் தயாரித்து பிரபுதேவா இயக்கும் படம் கருப்பு ராஜா வெள்ளை ராஜா. ஐசரி கணேஷ் இணை தயாரிப்பாளர். விஷால், கார்த்தி, சாயிஷா சைகல் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார், சமீர் ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் கதை மறைந்த இயக்குனர் கே.சுபாஷ் எழுதியது. 75 சதவிகிதம் அவர் எழுதியிருந்த கதையை எழுத்தாளர் சுபா முடித்து அதற்கு திரைக்கதை வசனமும் எழுதியுள்ளனர். இந்தக் கதையில் கார்த்திக்குத்தான் சாயிஷா ஜோடி. விஷாலுக்கு ஜோடி இல்லை. நிற வேற்றுமை கொண்ட இரு இளைஞர்களுக்கு தங்கள் நிறம் பற்றிய பெருமையும், தாழ்வு மனப்பாண்மையும் உண்டு. இந்த நண்பர்களுக்கிடையில் ஒரு பெண் நுழைகிறபோது நடக்கும் பிரச்சினைகள்தான் கதை.
ஆனாலும் ஒரே பெண்ணை இருவர் காதலிக்கிற முக்கோண காதல் கதை அல்ல. இதில் விஷாலுக்கு முரட்டுத்தனமாக கேரக்டர். அவர்தான் கருப்பு ராஜா. கார்த்திக் ஜாலியான காமெடி கேரக்டர். அவர்தான் வெள்ளை ராஜா. காமெடி, ரொமான்ஸ், செண்டிமென்ட், ஆக்ஷ்ன் கலந்த கதை. இரண்டு ஹீரோக்கள் கதையில் கொஞ்சம் வித்தியாசமான கதை இது.
0 comments:
Post a Comment