Wednesday, April 12, 2017

ஏமாலி படத்தலைப்பில் ஒரு பிழை


ஏமாலி படத்தலைப்பில் ஒரு பிழை



12 ஏப்,2017 - 13:52 IST






எழுத்தின் அளவு:








'தொண்டன்' படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி தற்போது 'ஏமாலி' என்ற படத்தில் நடிக்கிறார். 'லதா புரொடக்ஷன்ஸ்' என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனியுடன் சாம் ஜோன்ஸ் என்ற புதுமுக ஹீரோவும் நடிக்கிறார். கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்கிறார். சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப்படத்தை வி.இசட்.துரை இயக்குகிறார். அஜித் நடித்த 'முகவரி', விக்ரம் நடித்த 'காதல் சடுகுடு', சிம்பு நடித்த 'தொட்டி ஜெயா', பரத் நடித்த 'நேபாலி' போன்ற படங்களை இயக்கியவர் இவர்.

வி.இசட். துரை இயக்கும் ஏமாலி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஜெயமோகன் வசனம் எழுதும் இந்த படத்தின் ஒளிப்பதிவை எம்.ரத்திஷ் கண்ணா, பிரகாஷ் இருவர் கவனிக்கின்றனர். சாம்டி.ராஜ் இசை அமைக்கிறார். ஏமாலி என்று தலைப்பு தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. ஏமாலி என்பது தவறான வார்த்தை. ஏமாளி என்பதே சரியான வார்த்தை.

பலரும் இதை கண்டுகொள்ளாத நிலையில், ஒரு பத்திரிகையாளர்கள் இந்த தவறை சுட்டிக்காட்டி ட்வீட் செய்திருந்தார். அதோடு இயக்குநர் வி.இசட்.துரைக்கும் மெஸேஜ் அனுப்பினார். அதற்கு, ' தெரிந்தேதான் ஏமாலி என்று டைட்டில் வைத்துள்ளேன். படத்தில் இதற்கான காரணம் இருக்கிறது' என்று பதில் அனுப்பியுள்ளார் வி.இசட்.துரை.


0 comments:

Post a Comment