Wednesday, April 12, 2017

எதிர்பார்க்கப்படும் இயக்குனர் தனுஷ்


எதிர்பார்க்கப்படும் இயக்குனர் தனுஷ்



12 ஏப்,2017 - 13:36 IST






எழுத்தின் அளவு:








'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் 2002ம் ஆண்டு நாயகனாக அறிமுகமானவர் தனுஷ். தொடர்ந்து கடந்த 15 வருடங்களில் தமிழ், ஹிந்தி என 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 'ஆடுகளம்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.

நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராக, பாடகராக, தயாரிப்பாளராக என தன்னுடைய திறமைகளை சமீபகாலமாக வெளிப்படுத்தினார். அவருடைய குடும்பமே ஒரு இயக்குனர்கள் குடும்பம்தான். அப்பா கஸ்தூரிராஜா, அண்ணன் செல்வராகவன், அண்ணி கீதாஞ்சலி செல்வராகவன், மனைவி ஐஸ்வர்யா தனுஷ், மைத்துனி சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் இதற்கு முன் படங்களை இயக்கியுள்ளார்கள். தனுஷ் இப்போதுதான் 'ப.பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.

படத்தில் நாயகனாக நடித்துள்ள ராஜ்கிரண், தனுஷ் நடிப்பை மனமாரப் பாராட்டியுள்ளார். பல திறமைகளைக் கொண்டவர் தனுஷ், இயக்கத்திலும் வெற்றி பெறுவார் என்று கூறியிருக்கிறார்.

தமிழ்த் திரையுலகில் நாயகர்களாக இருந்து இயக்குனர்களாக மாறியவர்கள் சிலர் மட்டுமே. கமல்ஹாசன், அர்ஜுன், சிம்பு என சிலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர்கள் தங்களையே நாயகர்களாக வைத்துதான் படங்களை இயக்கியுள்ளார்கள். ஆனால், தனுஷ் 'ப.பாண்டி' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் மட்டும் நடித்து, ராஜ்கிரணை நாயகனாக நடிக்க வைத்திருக்கிறார். அதிலிருந்தே அவருடைய கதையின் மீது அவருக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நடிகராக தேசிய விருதை வென்றுள்ள தனுஷ் இயக்குனராகவும் சாதனை படைப்பார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.


0 comments:

Post a Comment