Wednesday, April 12, 2017

இந்தி பட உலகை நம்பி நான் இல்லை: கமல் பட நாயகி அதிரடி

இந்தி படஉலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் ரவீணா தண்டன். இவர் தமிழில் கமல் நடிப்பில் வெளிவந்த ‘ஆளவந்தான்’ படத்திலும் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கிஇருந்த ரவீணா, ‘மாத்தர்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். இந்த படத்தை பிரபலப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறார்.
இந்நிலையில் படங்களில் நடிப்பது பற்றி கூறிய ரவீணா தண்டன், “இந்தி பட உலகை மட்டும் நம்பி என் வாழ்க்கை இல்லை. எனது வாழ்க்கையின் ஒரு பகுதிதான் இந்த பட உலகம்.

எனக்கென்று கணவர், குழந்தைகள், குடும்பம் என்று சில கடமைகள் இருக்கின்றன. இன்னும் நிறைய வி‌ஷயங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

நான் இந்தி படங்களில் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒவ்வொரு வாரமும் என் பெயர் வரவேண்டும் என்று எண்ணி படங்களில் நடிக்க ஆசைப்படவில்லை” என்று தெரிவித்து இருக்கிறார்.

0 comments:

Post a Comment