வெற்றி நிச்சயம்!
13 ஏப்,2017 - 02:22 IST
கவண் படத்தில், தன் நடிப்புக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டு வந்துள்ளதால், சந்தோஷத்தில் இருக்கிறார், கேரளத்து பைங்கிளி மடோனா செபாஸ்டின். இதற்கு அடுத்தபடியாக, ப.பாண்டி படத்திலும், முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இந்த படமும், தனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என கூறும் அவர், தெலுங்கிலும், தன் பார்வையை பதித்துள்ளார். தெலுங்கில் வெளியான பிரேமம் படம், தனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தும், அங்கிருந்து வாய்ப்புகள் வராததால், ஏமாற்றம் அடைந்துள்ள மடோனா, தமிழில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடிப்பதன் மூலம், தெலுங்கிலிருந்து தானாக வாய்ப்பு தேடி வரும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
Advertisement
0 comments:
Post a Comment