Friday, April 14, 2017

ராஜ்கிரணின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற தனுஷ்


ராஜ்கிரணின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற தனுஷ்



14 ஏப்,2017 - 11:01 IST






எழுத்தின் அளவு:








சினிமாவில் நாயகன், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பன்முகம் கொண்டவர் நடிகர் தனுஷ். மேலும், தங்கமகன் படத்தில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் நடித்து வந்தபோது, சிலநாட்களாக அவர் பாயும்புலி படப்பிடிப்புக்காக மதுரை சென்றிருந்தார். அந்த சமயத்தில் தங்கமகன் படம் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை தானே படமாக்கினார் தனுஷ். அதைத்தொடர்ந்து, தற்போது ராஜ்கிரணை வைத்து பா.பாண்டி படத்தை தானே இயக்கியுள்ளார் தனுஷ்.

முக்கியமாக, தானும் ஒரு ஹீரோவாக இருந்தபோதும் அதில் தான் பிளாஷ்பேக்கில் மட்டுமே நடித்து விட்டு கதையின் நாயகனாக ராஜ்கிரணை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் தனுஷ். இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று திரையிடப்பட்ட நிலையில், அங்கு வந்த தனுஷிடம் படம் குறித்து அனைவருமே பாசிட்டீவான கருத்துக்களை சொல்லி அவரை பாராட்டினர். இதனால் அந்த இடத்திலேயே எமோசனலாகி கண்கலங்கி நின்றார் தனுஷ்.

இதையடுத்து, பட நாயகன் ராஜ்கிரணைக் கட்டித்தழுவி, காலைத் தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற்றார். அதன்பிறகு, சோசியல் மீடியாக்களில் பா.பாண்டி படம் குறித்து பாசிட்டீவான தகவல்கள் வெளியானதை அடுத்து கே.வி.ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரபலங்கள் தனுசுக்கு டுவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.


0 comments:

Post a Comment