Friday, April 14, 2017

பிளாஷ்பேக்: வீரபாண்டிய கட்டபொம்மனில் நடிக்க மறுத்த எஸ்.எஸ்.ராஜேந்திரன்


பிளாஷ்பேக்: வீரபாண்டிய கட்டபொம்மனில் நடிக்க மறுத்த எஸ்.எஸ்.ராஜேந்திரன்



14 ஏப்,2017 - 11:21 IST






எழுத்தின் அளவு:








நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களில் முத்தான படம் வீரபாண்டிய கட்டபொம்மன். ம.பொ.சி எழுதி கட்டபொம்மன் வரலாற்றை மையமாக கொண்டு பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கினார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவானது. இந்தப் படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் கேரக்டருக்கு அடுத்படியாக முக்கியமான கேரக்டர் அவரது தம்பி வெள்ளையத்தேவன் கேரக்டர். இதில் நடிக்க பல முக்கிய நடிகர்களிடம் அன்று பேசப்பட்டது.

எல்லோருமே இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்கள். அதனால் இயக்குனர் பி.ஆர்.பந்துலு எஸ்.எஸ்.ராஜேந்திரனை கேட்டார். அப்போது அவர் "நான் சிவகங்கை சீமை என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டேன். அதனால் அதில் நடிக்க இயலாது" என்று கூறிவிட்டார். ஆனால் உண்மையில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடிக்க விருப்பம் இல்லை. காரணம் கதைப்படி வீரபாண்டிய கட்டபொம்னை காட்டிக் கொடுத்தது சிவங்கை சீமை மன்னர்கள் என்பதாக உள்ளது. அதை கருதியே அவர் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதன் பிறகு ஜெமினி கணேசன் பேசப்பட்டார். அப்போது சாவித்ரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தால் அவரும் நடிக்க மறுத்தார். பின்னர் சிவாஜியும், பந்துலுவும் வற்புறுத்தி ஜெமினி கணேசனை நடிக்க வைத்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன் வெற்றி பெற்றது. சிவகங்கை சீமை தோல்வி அடைந்தது.


0 comments:

Post a Comment