Saturday, April 15, 2017

வாய்பேச, காதுகேட்க முடியாத தமன்னா


வாய்பேச, காதுகேட்க முடியாத தமன்னா



15 ஏப்,2017 - 15:21 IST






எழுத்தின் அளவு:








சமீபகாலமாக ஹீரோயின்களின் நடிப்பில் நிறையவே மாற்றம் தெரிகிறது. சும்மா மரத்தை சுற்றி ஹீரோவுடன் டூயட் ஆடாமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அந்தவகையில் நயன்தாரா, த்ரிஷா ஆகியோரை தொடர்ந்து தமன்னாவும் அந்த மாதிரி நடிக்க ஆரம்பித்திருக்கிறார். பாகுபலி படத்தில் வாள் வீசும் பெண்ணாக நடித்திருக்கும் தமன்னா, அடுத்தப்படியாக பாலிவுட்டில் ஒரு படத்தில் வாய்பேச முடியாத, காதுகேளாத பெண்ணாக நடிக்க உள்ளார். இப்படத்தை வாசு பாக்னானி தயாரிக்கிறார்.

இதுப்பற்றி தமன்னா கூறியிருப்பதாவது... ‛‛பாகுபலி படம் தான் என்னை வித்தியாசமான வேடங்களில் நடிக்க உதவியது. ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். ஆகையால் நானும் இனி வித்தியாசமான ரோல்களை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளேன். வாசு பாக்னானி படத்தில் வாய் பேச முடியாத, காது கேளாத பெண்ணாக நடிக்கிறேன். இதுவரை நான் நடித்திராத முற்றிலும் வித்தியாசமான வேடம் இது'' என்று கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment