Saturday, April 15, 2017

தப்புதண்டா படத்தின் ஆடியோவை வெளியிட்ட அகிலா பாலுமகேந்திரா!


தப்புதண்டா படத்தின் ஆடியோவை வெளியிட்ட அகிலா பாலுமகேந்திரா!



16 ஏப்,2017 - 09:22 IST






எழுத்தின் அளவு:








புதுமுக இயக்குனர் ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள படம் தப்புதண்டா. சத்யா- சுவேதா கய், மைம் கோபி, ஜான்விஜய், அஜய்கோஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் இசை விழா நேற்று மாலை 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், இயக்குனர்கள் பிரவீன்காந்த், ஷக்தி சிதம்பரம், ஸ்ரீகணேஷ், தாஸ் ராமசாமி, அகிலா பாலுமகேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தை இயக்கியுள்ள ஸ்ரீகண்டன் மறைந்த கேமரா கவிஞன் பாலு மகேந்திராவின் கூத்துப்பட்டறையில் இயக்குனர் கோர்ட்ஸ் படித்து விட்டு, படம் இயக்கும் முதல் மாணவன் ஆவார். மேலும், தனது பள்ளியில் சினிமா பயின்று விட்டு நடிக்க வந்த நடிகர்களின் பட விழாக்களில் கலந்து கொண்டு அவர்களை மனதார வாழ்த்தி வந்தவர் பாலுமகேந்திரா. ஆனால் அவர் இப்போது மறைந்து விட்டதால், அவரது மனைவி அகிலா பாலுமகேந்திரா, தப்புதண்டா படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு அப்பட இயக்குனர் ஸ்ரீகண்டனை வாழ்த்தியதோடு, படத்தின் ஆடியோவையும் வெளியிட்டார்.


0 comments:

Post a Comment