Wednesday, November 30, 2016


ar rahman musicஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பிடித்த பாடல்களை பட்டியல் இட்டால் அதற்கு முடிவே இருக்காது.


அந்த பட்டியலில் இடம் பெற தகுதியான பாடல்களில் ஒன்றுதான் டேக் இட் ஊர்வசி பாடல்.

ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த காதலன் படத்தில் இப்பாடல் இடம்பெற்றது.

இப்பாடலை மிகப்பிரம்மாண்டமாக படமாக்கி இருந்தார் ஷங்கர்.

இஸ்லாமிய பாடலாக தொடங்கி வேறு ஒரு தளத்திற்கு நம்மை இப்பாடல் எடுத்துச் சென்றது.

இந்நிலையில், தற்போது இப்பாடல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தன் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

Dear friends, I’m trying to rearrange ‘Take it Easy Urvasi’ for a performance and wish to update the Charanams.

Feel free to contribute.. Ofcourse please do leave out and avoid any reference to Hilary Clinton, Donald Trump or the currency situation for now and try to come up with something interesting & humorous in the same scaling of the original Tamil version..

ar rahman going to rearrange Take it Easy Urvasi song

Ambani Sankar


Ambani Sankar (2)


Ambani Sankar (3)


Ambani Sankar (4)







kollywood king








List of Tamil Movie Hits Top Collections in Chennai – 2016


சென்னை வசூலில் யார் டாப் இதோ லிஸ்ட்


இந்த வருடம் 150 படங்கள் வருகிறது, இந்த படங்களில் 10 படம் மட்டுமே நல்ல ஹிட் ஆகியுள்ளது.


  1. கபாலி 11 கோடி

  2. தெறி 10 கோடி

  3. ரெமோ 6.6 கோடி

  4. இருமுகன் 6 கோடி

  5. அச்சம் என்பது மடமையடா 5.8 கோடி

இவை சென்னை வசூல் மட்டுமே.


This year in kollywood cinema more 150 films has been released. Here the Top 5 that hits the Box Office List.


Comment Your Thoughts!













முதல் ரவுண்டில், பிசியான நடிகையாக வலம் வந்தாலும், தன் நடிப்பு திறமையை காட்டும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என, கவலைப்பட்டவர் தமன்னா. இப்போது, அந்த சோகம் தீர்ந்து விட்டதாக, ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். தர்மதுரை படத்தில் நடித்ததற்காக, சிறந்த ஹீரோயின் விருது, தமன்னாவுக்கு கிடைத்தது தான், அவரது மகிழ்ச்சிக்கான காரணம். 'ஏசியன் ...

சர்ச்சை நாயகன்



01 டிச,2016 - 01:23 IST






எழுத்தின் அளவு:








சிம்புவுக்கு பின், அதிகம் சர்ச்சையில் சிக்கும் நடிகராக உருவெடுத்து வருகிறார், ஜி.வி.பிரகாஷ். சமீபத்தில், நடிகர் விஜயை பாராட்டி அறிக்கை விட்டதால், அஜீத் ரசிகர்கள், சமூக வலைதளங்களில், அவரை துவைத்து எடுத்தனர். இப்போது, தனுஷ் ரசிகர்களின் கோபப் பார்வைக்கு அவர் ஆளாகியுள்ளார். தனுஷ் ஹீரோவாக நடித்த பல படங்களுக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார். ஆனால், சமீபகால தனுஷ் படங்களுக்கு, ஜி.வி., இசையமைக்கவில்லை. இதனால், தனுஷ் ரசிகர்கள், அவரை பற்றி சமூக வலைதளங்களில் கிண்டலடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு, ஜி.வி.பிரகாஷும் பதிலடியாக சில கருத்துக்களை தெரிவித்ததாகவும், இது, சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும், கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



201611301433185531_vaikom-vijayalakshmi-married-next-year_secvpfபிரபல பாடகியும், வீணை இசைக்கலைருமான வைக்கம் விஜயலட்சுமி, கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு 35 வயது ஆகிறது. இந்நிலையில், இவருக்கும் கோழிக்கோட்டை சேர்ந்த சந்தோஷ் என்னும் இசைக் கலைஞருக்கும் டிசம்பர் மாதம் 13-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது. அதைத் தொடர்ந்து அடுத்த வருடம் மார்ச் 29-ந் தேதி இவர்களது திருமணம் நடக்கவிருக்கிறது.


பார்வை குறைபாடு உள்ள விஜயலட்சுமி, தனது தனித்துவமான குரலுக்காகவும், பாடும் திறனுக்காகவும் பலராலும் போற்றப்படுபவர். மலையாளத்தில் ‘செல்லுலாய்டு’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘பாகுபலி’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.


இவர் சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரசிவாஜி’ படத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இணையதளங்களில் வைரலாக பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



201611301713579931_sri-priya-request-to-khusboo-and-lakshmi-ramakrishnan_secvpfசில தனியார் தொலைக்காட்சிகளில் குடும்பத்தினருக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வதாக கூறி, நடிகைகளை வைத்து பஞ்சாயத்து நடத்தி அவர்களுக்குள் சண்டையிட வைத்து சமாதானம் செய்து வைக்கிறார்கள். இவற்றில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.


அதனைத் தொடர்ந்து தற்போது நடிகை குஷ்புவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குடும்ப பிரச்சினைக்கு தீர்வு சொல்வதாக கூறி ஒரு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி ஒன்றில் கைகலப்பு ஏற்பட்டது. இது பலராலும் விமர்சிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சிகள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியாவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “கணவன், மனைவி இடையே பிரச்சனை என்றால் அதை தீர்க்க குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளன. அவர்கள் மீது ஏதேனும் குற்றம் இருந்தால் அவர்களை தண்டிக்க குற்றவியல் சட்டங்களும் உள்ளன. அவற்றை விடுத்து நடிகர்களான நாம் தொலைக்காட்சியில் அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டு தீர்ப்பு வழங்குவது சரியல்ல.


அப்படி அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க நினைத்தால் கேமரா முன் பேசாமல் நீதிமன்றத்தை அணுகும் சரியான வழிமுறையை காட்டுங்கள். நாம் கற்ற நமக்கு தெரிந்த கலைக்கு மட்டும் நடுவர்களாக இருப்போம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக வலைதளத்தில் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



அமைதியான சங்கத்தை அடிதடி சங்கமாக மாற்றி விட்டனர்: சரத்குமார்



30 நவ,2016 - 12:31 IST






எழுத்தின் அளவு:








தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று ஐதராபாத்திலிருந்து சென்னை வந்த சரத்குமார் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

புதிய நிர்வாகிகள் அறிவித்த பொதுக்குழுவில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. நான் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டது குறித்த வழக்கு நடந்து வருகிறது. பொதுக்குழுவின் இடமாற்றத்தை முறைப்படி உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் நடத்தி உள்ளனர். இது சங்க விதிப்படி செல்லாது, அடிதடி நடந்திருக்கிறது. கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கிறது. நான் எத்தனையோ பொதுக்குழு நடத்தியிருக்கிறேன். ஒரு சின்ன சலசலப்புகூட வந்ததில்லை. அமைதியாக இருந்த சங்கத்தை அடிதடி சங்கமாக மாற்றியதுதான் இவர்கள் செய்த சாதனை.

என் மீது ஏதாவது ஒரு குற்றசாட்டை கூறிக்கொண்டிருப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். குற்றம் சாட்டி பொறுப்புக்கு வந்தவர்கள் இப்போது குற்றத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் 150 கோடி ஊழல் என்றார்கள். பிறகு 60 கோடி என்றார்கள். அதன்பிறகு 1.67 கோடி என்றார்கள். புதிது புதிதாக குற்றங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்ட கணக்கையெல்லாம் கொடுத்தாகிவிட்டது. என்றார்.


எங்க வீட்டு பிள்ளை, உழைப்பாளி, நம்மவர், தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட வெற்றி படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில், பரதனின் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் “பைரவா “ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன்(29.11.2016) “ ...

vijay atlee gvprakashபைரவா படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.


ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பார் என்று தகவல்கள் வந்தன.


ஆனால், தற்போது இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் கமிட் ஆகியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.


இதன் சூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.


இதன் முதற்கட்ட படப்பிடிப்பை கலிபோர்னியாவில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவில் நடத்தவிருக்கிறார்களாம்.


இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இங்கே படமாக்கப்பட்டதில்லை.


எனவே இந்த பெருமை இயக்குனர் அட்லிக்கு கிடைக்கவுள்ளது.


‘லைட்ஸ் அவுட்’, ‘கான்ஜுரிங் 2’, ‘காட்ஸில்லா’, ‘ஹாரிபாட்டர்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்கள் இங்கே படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


ஜெயராம் மகன் காளிதாஸுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய ரசிகை..!



30 நவ,2016 - 15:11 IST






எழுத்தின் அளவு:








பொதுவாக இளம் நடிகர்களுக்கு ரசிகைகள் உருவாவது இயல்பான ஒன்றுதான். ஒரு சிலருக்கு சம்பந்தப்பட்ட நடிகரை பிடித்துப்போய் வயசுக்கோளாறால் அவர்கள் மீது காதலிலும் விழுவார்கள். இதனாலேயே வீட்டைவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி, தங்களது ஆதர்ச நடிகரை பார்க்க கிளம்பிவிடும் ரசிகைகள் இன்றும் கூட உண்டு. இப்படி கிளம்பும் துணிச்சல் இல்லாத சில இளம்பெண்கள் முன்பெல்லாம் தங்களது மனதை கடிதங்களாக மாற்றி நடிகர்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இதில் சிலர் ரத்தத்தால் கூட கடிதம் எழுதும் அறியாமை நிகழ்வுகளும் நடைபெறும்.

ஆனால் இன்று எல்லாமே எஸ்.எம்.எஸ், பேஸ்புக், வாட்ஸ் அப் என்று மாறிவிட்ட பின்னர் கடிதம் எழுதும் போக்கு குறைந்துள்ளது அல்லது அழிந்தேவிட்டது என்று நினைத்தால், ஜெயராம் மகன் காளிதாஸுக்கு ரத்தத்தால் காதல் கடிதம் எழுதி அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளார் கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர்.

இதனால் அதிர்ச்சியான காளிதாஸ், தன் மீது உண்மையான அன்பு வைத்திருப்போர், அதைக்காட்டுவதற்கு இதுபோன்ற கண்டிக்கத்தக்க முயற்சிகளில் இறங்க கூடாது எனவும், தான் நடித்த படங்களை தியேட்டர்களுக்கு சென்று பார்த்து ரசிப்பதே தனக்கு அவர்கள் அன்பை செலுத்தும் விதமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். காளிதாஸ் நடித்து ஒரே ஒரு படம் மட்டுமே வெளியான நிலையில் இப்படி ஒரு கடிதம் அவருக்கு வந்திருப்பது ஆச்சர்யம் தான்.


சமீபத்தில் நடிகை காவ்யா மாதவனை மறுமணம் செய்துகொண்ட திலீப் பலரின் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார். குறிப்பாக, அவர் வேறு யாரோ ஒரு பிரபலமில்லாத, அல்லது வேறு துறையை சார்ந்த ஒருவரை திருமணம் செய்திருந்தால்கூட, இந்த அளவுக்கு விமர்சனங்கள் எழுந்திருக்க வாய்ப்பில்லை.. ஆனால் ஏற்கனவே அவர் முதல் திருமணம் செய்து விவாகரத்து செய்ததும் ஒரு ...

india national flagஇந்தியா முழுவதும் உள்ள தியேட்டர்களில் இனி தேசிய கீதம் ஒளிப்பரப்பப்பட வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்போது, திரையில் தேசிய கொடியை காட்டவேண்டும் என்றும் இதில் வணிக ரீதியான ஆதாயம் எதையும் தேடக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இனி தியேட்டர்களில் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.

ஆனால், இதற்கு எல்லாம் முன்னோடியாக சென்னை, ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில் காலம் காலமாக இது அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Director Visu confirms dhanush parentsசில மாதங்களாவே கஸ்தூரி ராஜாவிடம் உள்ள தனுஷ் எங்கள் மகன் என சொந்தம் கொண்டாடி வருகிறன்றனர் கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர்.


இந்த விசாரணைக்காக தனுஷ் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான விசு இது குறித்து ஒரு போட்டோவை வெளியிட்டு தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில்… “நான் இயக்கிய மணல் கயிறு முதல் சகலகலா சம்பந்தி வரை என்னுடன் உதவி இயக்குனராக இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி.

அதன்பின்னர் என் ராசாவின் மனசிலே படத்தை அவர் இயக்கும்போது தன் பெயரை கஸ்தூரி ராஜா என மாற்றிக் கொண்டார்.

தனுஷ், செல்வராகவன் உள்ளிட்ட அவரின் குடும்பத்தை எனக்கு நன்றாக தெரியும்.

நடிகர் தனுஷ் அவர்கள், கிருஷ்ணமூர்த்தி என்ற கஸ்தூரிராஜாவின் மகன்தான்” என்று தெரிவித்துள்ளார்.

அந்தப் போட்டோ இதுதான்…



bairavaa shoot overபரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படத்தின் சூட்டிங் நேற்றுடன் முடிவடைந்தது.


இறுதியாக பூசணிக்காய் உடைத்து நிறைவு செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.


இப்பட படப்பிடிப்பு தளத்தின் அருகே ரஜினியின் 2.ஓ பட சூட்டிங் நடந்து வருவதை அறிந்த விஜய், அங்கே சென்று மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்து இருக்கிறார்.


இவர்கள் சந்தித்தால் நிச்சயம் அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி இருக்கும்.


ஆனால், 2.0 பட மேக்கப்பில் ரஜினி இருந்ததால், எந்த புகைப்படமும் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

Tuesday, November 29, 2016


sivakumar suriyaஇன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா.


படத்திற்கு படம் வித்தியாசமான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் சிவகுமாரின் மகன் என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் நடிக்க வருவதற்கு முன்பு, இவர் சிவகுமாரின் மகன் என்பதை யாரிடமும் சொல்லாமல் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் பல கிலோ மீட்டர் வரை பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்வாராம்.

ஆபிஸை சுத்தம் செய்வது போன்ற வேலைகளிலும் ஈடுபடுவாராம்.

சூர்யாவின் இந்த கஷ்டங்களை கூட்டத்தில் ஒருத்தன் பாடல் வெளியீட்டு விழாவில் பேசினார் சிவகுமார்.

ஞானவேல் இயக்கியுள்ள கூட்டத்தில் ஒருத்தன் படத்தில் அசோக் செல்வன், பிரியா ஆனந்த் நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.















Kabali Movie a Huge Loss to Distributors:


கபாலி நஷ்டம் இல்லை பணமுடங்கும் நாடகம்


கபாலி படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்தது, இப்படம் ரசிகர்களையும் வெகுவாக கவந்தது.


இந்த படம் வெளிவந்து 150 நாட்கள் கழித்து படம் ப்ளாப் எங்களுக்கு பணம் வேண்டும் என்று ஒரு கும்பல் கிளமியுள்ளது.


இப்போது தாணு அவர்கள் பணம் புடுங்கும் நாடகம் இது, படம் நல்ல வசூலை தந்துவிட்டது என கூறியுள்ளார்.


Superstar Rajinikanth Starring kabali a big blockbuster in tamil cinema of the year 2016. But some distributors rumouring of the kabali loss.


Comment Your Thoughts!














கீர்த்தி சுரேஷை கவர்ந்த இயக்குனர்கள்!



30 நவ,2016 - 09:13 IST






எழுத்தின் அளவு:








ரஜினிமுருகன், ரெமோ படங்களுக்கு பிறகு விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அடுத்தபடியாக தமிழில் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நானியுடன் நேனு லோக்கல் படத்தில் நடித்து விட்டவர், அடுத்தபடியாக தீவிரமாக கதை கேட்டு வருகிறார். முன்னணி ஹீரோக்களின் படம் என்றாலும், கதையில் தனக்கான பங்கு என்ன என்பதை டைரக்டர்களிடம் துருவி துருவி கேட்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்த நிலையில், தன்னை கவர்ந்த டைரக்டர்களான மணிரத்னம், கெளதம் மேனன் உள்பட சில முன்னணி டைரக்டர்களின் பெயரை பட்டியலிட்டுக்கொண்டு அவர்களின் படங்களில் நடிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். இதில், தற்போது கார்த்தியை வைத்து மணிரத்னம் இயக்கி வரும் காற்று வெளியிடை படத்தின் ஆடிசனுக்கு சென்றபோது கீர்த்தி சுரேஷ் செலக்ட் ஆகவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் அவர் இயக்கத்தில் நடித்து விடுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். அதேபோல் கெளதம்மேனனையும் அடுத்த டார்கெட்டாக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், அவர் இயக்கி வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தை பார்த்துவிட்டு உடனே அவருக்கு போன் செய்து படத்தில் தன்னை கவர்ந்த விசயங்களை பகிர்ந்து கொண்டாராம் கீர்த்தி சுரேஷ். அப்போது அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்ற தனது ஆசையையும் தெரிவித்துள்ளாராம்.




தலை முடிதான் சான்ஸ் வாங்கித்தந்தது! -ராகவா ஆனந்த்



30 நவ,2016 - 09:01 IST






எழுத்தின் அளவு:








ஜீவா நடித்த திருநாள் மற்றும் இருடியம் உள்பட பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர் ராகவா ஆனந்த். தற்போது புரூஸ்லீ, மாற்றுத்திறனாளி, அல்வா உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். நான் தீவிரமான எம்.ஆர்.ராதா ரசிகன் என்று சொல்லும் அவர், அவரை பின்பற்றி ஒரு நடிகராக வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், திருநாள் படத்தில் ஜீவாவுடன் வில்லத்தனமான ரோலில் நடித்தேன். இருடியம் படத்தில் காமெடியனாக நடித்தேன். தற்போது ஜி.வி.பிரகாசின் புரூஸ்லி மற்றும் மாற்றுத்திறனாளி, அல்வா படங்களில் நெகடீவ் கலந்த வேடங்களில் நடிக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இப்போதைக்கு இந்த மாதிரியான வேடங்களில்தான் நடிப்பேன் என்று கூறவில்லை. டைரக்டர்கள் என் தோற்றத்திற்கு எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் மறுக்காமல் நடிப்பேன்.

மேலும் நான் சினிமாவில் 20 வருடமாக இருக்கிறேன். நீண்டகால முயற்சி இப்போதுதான் கைகொடுத்துள்ளது. முதலில் நார்மல் கெட்டப்பில் சான்ஸ் கேட்டேன். யாரும் கண்டு கொள்ளவில்லை. பின்னர் தலையில் முடிவளர்த்து வித்தியாசமான கெட்டப்புக்கு மாறினேன். அதன்பிறகுதான் டைரக்டர்கள் என் பக்கம் திரும்பினார்கள். எனக்கு மரியாதை கிடைத்தது. அதனால் தலைமுடியை நன்றாக பராமரித்து வருகிறேன் என்று கூறும் ராகவா ஆனந்த், எனக்கு பிடித்த மான நடிகர் எம்.ஆர்.ராதா. இப்படித்தான் என்றில்லாமல் எல்லா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடக்கூடிய அற்புதமான நடிகர். அவரை மாதிரி நடிக்க முடியாது என்றாலும், அவரை பின்பற்றி சினிமாவில் நானும் ஒரு நடிகனாக இடம்பிடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார்.


அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு கவுதம் மேனன் இயக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் மும்பையில் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை 80 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இரண்டு பாடல் காட்சிகளும், கிளைமாக்ஸ் காட்சியும் மட்டுமே படமாக்கப்பட ...
பாலிவுட்டின் பிரபல நடிகர் சுனில் ஷெட்டி. இவரது மகள் அதியா ஷெட்டி மற்றும் மகன் அஹான் ஷெட்டி. அதியாவை, தான் தயாரித்த ‛ஹீரோ' படத்தில் அறிமுகம் செய்தார் சல்மான்கான். தொடர்ந்து அஹானையும் சல்மான் அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது. ஆனால் இப்போது அதில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அஹானை அறிமுகம் செய்ய இருப்பவர் ...

அம்பா சமுத்திரத்தில் பிருத்விராஜுக்கு என்ன வேலை..?



29 நவ,2016 - 16:06 IST






எழுத்தின் அளவு:








டெக்னிகல் வேல்யூ அதிகம் உள்ள, மலையாளத்தில் உருவாகவுள்ள விமானம் என்கிற படத்தில் பிருத்விராஜ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே நாம் சில தகவல்களை சொல்லியிருக்கிறோம். உண்மையிலேயே உயிருடன் இருக்கும் ஒருவரின் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய சாதனை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப்படம் உருவாகிறது. சில வருடங்களுக்கு முன் கேரளாவில் பரப்பரப்பான செய்திகளில் இடம்பிடித்தவர் தான் ஷாஜி தாமஸ்.. வாய் பேசமுடியாத, கேட்கும் திறனையும் இழந்த, ஏழாம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை கைவிட்ட இந்த ஷாஜி என்பவர் தனது விடாமுயற்சியால் மரக்கட்டைகளையும் பைக் இஞ்சினையும் வைத்து விமானம் ஒன்றை உருவாக்கி பறக்கவைத்தார். அந்த ஷாஜியின் கதைதான் இந்த விமானம்..

இந்தப்படத்தில் விமானத்தை உருவாக்கும் ஷாஜி என்கிற இளம் விஞ்ஞானியின் கேரக்டரில் தான் நடிக்க இருக்கிறார் பிருத்விராஜ்.. இந்த கேரக்டரில் நடிக்கும் பிருத்விராஜ் வெறுமனே விமானத்தை உருவாகும் விஞ்ஞானியாக மட்டும் இல்லாமல், சில காட்சிகளில் சிறிய ரக பிளைட்டையும் ஓட்டவேண்டி இருக்கிறதாம். இதற்கான அடிப்படை நுணுக்கங்களை கற்றுக்கொள்ள தமிழ்நாட்டில் அம்பாசமுத்திரம் என்கிற ஊருக்கு பிருத்விராஜ் விசிட் அடிக்க இருக்கிறாராம்.

காரணம் அங்கேதான் ஆச்சர்யப்படும்படியாக ப்ளையிங் யார்ட் ஒன்று இருக்கிறது.. இதை சொந்தமாக வைத்திருப்பவர் முன்னாள் பைலட் எஸ்.கே.ஜே நாயர் என்பவர்.. இவரிடம் தான் விமானம் ஓட்டுவது குறித்து பாடங்களை கற்க இருக்கிறார் பிருத்விராஜ். தற்போது ரோஷிணி தினகர் என்பவரது டைரக்சனில் மை ஸ்டோரி என்கிற படத்துக்காக போர்ச்சுகலில் இருக்கும் பிருத்விராஜ் அந்தப்படத்தின் வேலைகளை முடித்துவிட்டு இந்த பயிற்சியில் ஈடுபட இருக்கிறாராம்.