விக்னேஷ்சிவனின் பட பூஜைக்கு நயன்தாரா வராதது ஏன்?
03 நவ,2016 - 10:15 IST
ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இந்தப்படத்தின் பூஜை நேற்று சென்னை, மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. கேரள மக்களின் அபிமான ஆலயமான ஐயப்பன் கோவிலில் சூர்யா நடித்த படத்தின் பூஜை நடைபெற்றதன் காரணத்தை விசாரித்தபோது, பின்னணியில் நயன்தாரா இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது காதலரான விக்னேஷ்சிவன் இயக்கும் படம் என்பதால் ‛தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பூஜையை ஐயப்பன் கோவிலில் வைக்க வேண்டும் என்று விரும்பினாராம் நயன்தாரா.
தன் காதலியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் விக்னேஷ்சிவன். அவரது வேண்டுகோளின்படியே தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பூஜையை ஐயப்பன் கோவிலில் வைத்திருக்கிறார்கள். இவ்வளவுக்கும் பிறகும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பூஜைக்கு நயன்தாரா வரவில்லை என்பதுதான் வேடிக்கை.
தன் காதலரின் புதுப்பட பூஜைக்கு வர வேண்டும் என்று நயன்தாரா ஆசைப்பட்டதாகவும், அப்படி வந்தால் தான் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கு வராத நயன்தாரா தான் நடிக்காத படத்தின் பூஜைக்கு வந்தது ஏன் என்று சர்ச்சைகள் கிளம்பும் என்பதால் கடைசி சேரத்தில் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
0 comments:
Post a Comment