சின்னத்திரையில் இந்த ஆண்டு நிறைய ஜோடிகள் தலை தீபாவளி கொண்டாடப் போகின்றனர். கல்யாணம் முதல் காதல்வரை அமித்பார்கவ் தொடங்கி சரவணன் மீனாட்சி மைனா வரை இந்த ஆண்டு புது ஜோடிகள் தலை தீபாவளி கொண்டாடினர்.
சின்னத்திரையில் சீரியலில் ஒன்றாக நடிப்பவர்களும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் காதல் திருமணம் செய்து கொள்வது சாதாரண விசயமாகிவிட்டது. மர்மதேசம் ஜோடி சேத்தன் தேவதர்ஷினி தொடங்கி இன்றைக்கு அமித்பார்க்கவ் ஸ்ரீரஞ்சனி திருமணம் வரை பல சின்னத்திரை ஜோடிகள் காதலித்து திருமண பந்தத்தில் இணைந்தவர்கள்தான்.
இந்த ஆண்டு அமித்பார்க்கவ், ஸ்ரீரஞ்சனி , கணேஷ் வெங்கட்ராம், நிஷா கிருஷ்ணன், கயல் சந்திரன் அஞ்சனா ஆகியோருடன் இயக்குநர் ராஜூ முருகன் தொகுப்பாளினி ஹேமா சின்ஹாவும் தலை தீபாவளி கொண்டாடினர்.
கணேஷ் வெங்கட்ராம் – நிஷா கிருஷ்ணன்

கயல் சந்திரன் அஞ்சனா

அமித்பார்கவ் ஸ்ரீரஞ்சனி

சன் டிவி தியா மேனன் கார்த்திக்
சன் டிவி தொகுப்பாளினி தியா மேனன் சிங்கப்பூர் தொழிலதிபர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிங்கப்பூர் போனாலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியை தொடரும் இவருக்கு இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடினர்.
ராஜூ முருகன் ஹேமா சின்ஹா
குக்கூ, ஜோக்கர் பட இயக்குநர் ராஜுமுருகன், டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஹேமா சின்ஹா என்பவரைக் காதலித்து செப்டம்பர் 4ம் தேதி கரம்பிடித்தார். சுஜிதா என்ற பெயரில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய சுஜிபாலா – பிரனேஷ் திருமணம் நடந்தது. இந்த ஜோடிகள் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடினர்.

0 comments:
Post a Comment