நானி நடிக்கும் அடுத்த திரைப்படம்
02 நவ,2016 - 08:47 IST
ஓரு வருடத்திற்கு குறைந்தது நான்கு படங்களாவது நடித்து விட வேண்டும் எனும் குறிக்கோளில் இருக்கும் நானி, நேனு லோகல் படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நேனு லோக்கல் திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டி விட்ட நிலையில், புதிய படத்தில் நடிக்க நானி தற்போது தயாராகி வருகின்றார். ஜென்டில்மேன் படத்தில் நானியுடன் டூயட் பாடிய நடிகை நிவேதா தாமஸ் இப்படத்திலும் நாயகியாக நடிக்கின்றார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் தனனைய்யாவுடன் இணைந்து கோண வெங்கட் தயாரிக்கின்றார். விரைவில் படப்பிடிப்புகளை துவங்க முடிவு செய்துள்ள படக்குழு அமெரிக்காவில் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்த ஏற்பாடுகளை துவங்கவுள்ளன. இதற்காக அமெரிகாவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. நானி நடிக்கும் அடுத்த திரைப்படம்.
0 comments:
Post a Comment