Tuesday, November 1, 2016

தியேட்டரில் பட்டாசு கொளுத்திபோட்ட ஷாரூக் ரசிகர்கள் கைது


தியேட்டரில் பட்டாசு கொளுத்திபோட்ட ஷாரூக் ரசிகர்கள் கைது



01 நவ,2016 - 17:43 IST






எழுத்தின் அளவு:








கரண் ஜோகர் இயக்கத்தில், ரன்பீர், அனுஷ்கா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரது நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளியாகியுள்ள படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில்'. இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் இருந்தபோதும் வசூல் சிறப்பாக உள்ளது. அதிலும் படத்தில் ஷாரூக்கான், ஆலியாபட் போன்றவர்கள் எல்லாம் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது இப்படத்திற்கு கூடுதல் பலத்தை தந்துள்ளது. இதனிடையே மும்பையில் உள்ள ஒரு தியேட்டர்களில் ஷாரூக்கான் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.

‛ஏய் தில் ஹே முஷ்கில் படத்தில் ஷாரூக்கானும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதனால் தியேட்டரில் அவர் தோன்றும் போது உணர்ச்சி வசப்பட்ட ஷாரூக்கானின் ரசிகர்கள் ராக்கெட் உள்ளிட்ட பட்டாசுகளை தியேட்டர் ஸ்கிரீன் முன்பு கொளுத்தி போட்டு ஆட்டம் போட்டனர். இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.


0 comments:

Post a Comment