தமிழ் சினிமாவின் காலகட்டங்களை டாப் ஹீரோக்களை வைத்து பிரித்துவிடலாம்.
என்.எஸ்.கே காலம் தொட்டு இதுவே நடைமுறையாக இருந்து வருகிறது.
அவருக்கு பிறகு எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் என்று சொல்லலாம்.
இந்த ஹீரோக்களின் பெயர்கள் பெரிதாக இருந்தாலும் பெரும்பாலும் இவர்களின் பெயர்கள் மூன்றெழுத்தில் அடங்கிவிடுகிறது.
அதன்பின்னர் இதுவே தொடர்கதையாகி விடுகிறது.
ரஜினி-கமல் என்று ஆரம்பித்து விஜய்-அஜித்-சூர்யா என தொடர்ந்து, அதன்பின்னர் தனுஷ்-சிம்பு என்று நீள்கிறது.
கிட்டதட்ட கடந்த 60 வருட தமிழ் சினிமாவுக்கு இந்து மூன்றெழுத்து ஹீரோக்கள் தானாகவே அமைந்தனர்.
ஆனால் தற்போது வளர்ந்து வரும் கலைஞர்களான சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி இருவரும் இதனை உடைந்து தெறிந்துள்ளனர் எனலாம்.
நீண்ட பெயர்களை இவர்கள் வைத்திருந்தாலும் தற்போது டாப் ஹீரோக்களின் வரிசையில் இவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.
இனி இந்த பெயர் வரிசையில் தமிழ் சினிமாவின் காலகட்டம் அமைக்கப்படுமா? அல்லது மறுபடியும் மூன்றெழுத்து மந்திரம் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment