Thursday, March 2, 2017

இந்திய பிரதமரும், இங்கிலாந்து ராணியும் பாகுபலியை பார்க்க ஏற்பாடுகள் தீவிரம்


இந்திய பிரதமரும், இங்கிலாந்து ராணியும் பாகுபலியை பார்க்க ஏற்பாடுகள் தீவிரம்



02 மார்,2017 - 15:11 IST






எழுத்தின் அளவு:








இந்திய சினிமாவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது ‛பாகுபலி 2'. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள இந்தப் படம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. வருகிற ஏப்ரல் 28ந் தேதி வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகுபலி படத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தும் ஒன்றாக அமர்ந்து பார்க்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது.

இந்தியா-இங்கிலாந்து கலாச்சார ஒருங்கிணைவுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி இந்தியாவும், இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இதன் ஒருபகுதியாக இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் பிரபலமான இந்திய படங்கள் திரையிடப்படுகிறது. அதில் ஒரு படமாக பாகுபலி-2வும் திரையிட தேர்வாகி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக பாகுபலி-2வை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து ராணி எலிசபெத்தும் இணைந்து பார்க்க இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஏற்பாடுகள் செய்து வருகிறார். இதற்கான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது.


0 comments:

Post a Comment