ராகவா லாரன்சை நேரடியாகவே தாக்கிய வில்லன் நடிகர்!
11 மார்,2017 - 09:47 IST
ரியல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னமும் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இருப்பினும், அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்கிற போட்டி திரைக்குப்பின்னால் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, விஜய்-அஜீத் ரசிகர்கள் அதுகுறித்து அடிக்கடி இணையதளங்களில் மோதிக்கொண்டு வருகிறார்கள். இதன்காரணமாக, யங் சூப்பர் ஸ்டார் என்று கூறி வந்த சிம்புவும், இளைய சூப்பர் ஸ்டார் என்று கூறிவந்த தனுசும்கூட இப்போது அதுபற்றி வாயே திறப்பதில்லை.
இந்தநிலையில், தற்போது திரைக்கு வந்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் மக்கள் சூப்பர் ஸ்டார் என்று ராகவா லாரன்சின் பெயருக்கு முன்பு போட்டிருப்பது பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. கோலிவுட்டில் பலரும் இதுபற்றி விமர்சனம் செய்து வருகிறார்கள். விஜய்-அஜீத் ரசிகர்கள் வறுத்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, நடிகர் அருள்தாஸ், தனது இணைய பக்கத்தில், சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே. ஆனால் கண்டவர்களெல்லாம் சூப்பர் ஸ்டார் என்று டைட்டீல் போட்டுக்கொள்கிறார்கள் -என்று நேரடியாக தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.
இதையடுத்து, மக்கள் சூப்பர் ஸ்டார் என்று டைட்டீலில் போட்டதே எனக்கு தெரியாது. இது மொட்ட சிவா கெட்ட சிவா டைரக்டர் சாய் ரமணியோடவேலை.
உலகத்திற்கே ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்று செய்தி வெளியிட்டுள்ளார் லாரன்ஸ். மேலும், நான் அந்த பட்டத்தை விரும்பவில்லை. கண்மணி ராகவா லாரன்ஸ் என்று என் அம்மாவின் பெயரை எனது பெயருடன் சேர்த்துக்கொள் ளவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால், இதெல்லாம் படத்தின் விளம்பரத்திற்காக அவர்கள் தெரிந்தே செய்த விளம்பர யுக்திதானே தவிர வேறெதுவுமில்லை. இப்படியொரு விசயம் லாரன்சின் கவனத்துக்கு வராமல் எப்படி படத்தில் இடம்பெறும் என்று கோலிவுட்டில் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment