Sunday, March 12, 2017

லாரன்சுக்கு எதிராக விஜய்-அஜித் ரசிகர்கள்!


லாரன்சுக்கு எதிராக விஜய்-அஜித் ரசிகர்கள்!



13 மார்,2017 - 09:35 IST






எழுத்தின் அளவு:








சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், சில நடிகர்களைப்போன்று விசிட் அடித்து விட்டு எஸ்கேப் ஆகாமல், சில நாட்கள் அங்கேயே முகாமிட்டிருந்தார். தேவையான உதவிகளையும் தனது சார்பில் செய்து போராட்ட களத்தில் இருந்த இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்தார். இதனால் இனிமேல் தனக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல மரியாதை இருக்கும். தனது படங்களுக்கும் பெரிய வெற்றி கிடைக்கும் என்பது லாரன்சின் எண்ணமாக இருந்தது.

ஆனால், சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான மொட்ட சிவா கெட்ட சிவா படம், பலதடைகளை தாண்டி வந்தபோது, ரசிகர்கள் தனக்கு பெரிய ஆதரவை கொடுப்பார்கள் என்று நினைத்த லாரன்சுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் நல்லதொரு ஓப்பனிங் இருந்தபோதும், அவர் போட்டிருந்த மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் விஜய், அஜித் ரசிகர்ளை டென்சன் செய்து விட்டது. இதனால் சமூக வலைதளங்களில் படம் குறித்து தவறான கமெண்ட்ஸ்களை பரப்பி விட்டனர். இந்த பரப்புரை காரணமாக படத்திற்கான வசூல் பாதித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், திரையிட்ட நாளில் இருந்தே அனைத்து ஏரியாக்களிலும் மொட்ட சிவா கெட்ட சிவா அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடி இதுவரை 10 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக அப்படக்குழுவினர் கூறி வருகின்றனர். இருப்பினும், சனி, ஞாயிறு வசூலை வைத்து சொல்லக்கூடாது. திங்கள்கிழமை முதல் படத்தின் வசூல் எப்படி என்று பார்க்க வேண்டும். அதன்பிறகுதான் படம் வெற்றியா? தோல்வியா? என்பது தெரியும் என்று பாக்ஸ் ஆபீஸில் கூறுகிறார்கள்.



0 comments:

Post a Comment