நயன்தாரா இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா
15 ஏப்,2017 - 12:36 IST
நயன்தாரா நடிப்பில் வெளியாகி வசூலை குவித்த படம் மாயா. இப்படத்தை இயக்கியவர் அஸ்வின் சரவணன். மாயா படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, அஸ்வின் சரவணன் நிறைய படங்களை இயக்கிவருகிறார் . மாயா படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் தனது அடுத்த படத்தை எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்க இருக்கிறார் . இப்படத்திற்கு இறவாக்காலம் என்று பெயரிட்டு இருக்கிறது படக்குழு. எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ஷிவதா, வாமிகா ஆகியோர் நடிக்கயிருக்கிறார்கள். ரான் யத்தன் யோகான் என்பவர் இசையமைக்கிறார். இப்படத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
0 comments:
Post a Comment