அடுத்த மாதம் தனுஷின் ஹாலிவுட் படம் தொடங்குகிறது!
15 ஏப்,2017 - 10:18 IST
தமிழ்ப் படங்களில் பிசியாக நடித்து வந்தபோது திடீரென்று இந்திக்கு சென்று ராஞ்ஜனா, ஷமிதாப் ஆகிய படங்களில் நடித்தவர் தனுஷ். இதில், ராஞ்ஜனா படம்
ரூ. 100 கோடி வசூல் சாதனை பட்டியலில் இடம்பிடித்தது. அதையடுத்து ஒரு ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்கயிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. பின் னர் அதுபற்றிய தகவல் இல்லை.
இந்நிலையில், தமிழில், தொடரி, கொடி படங்களுக்குப்பிறகு என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, விஐபி-2 படங்களில் நடித்து வரும் தனுஷ், பா.பாண்டி படத்தையும் இயக்கி வெளியிட்டார். அந்த படம் வெற்றி பெற்றிருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் காணப்படும் தனுஷ், படம் குறித்த ரசிகர்களின் கருத்துக்களை அறிய டுவிட்டரில் உரையாடினார்.
அப்போது, கைவசமுள்ள படங்களை முடித்ததும் ஆகஸ்டில் மாரி-2வில் நடிக்கிறேன். அந்த படத்தில் நடித்து முடித்ததும் அக்டோபரில் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கப்போகிறேன். இதற்கிடையே அடுத்த மாதம் நான் நடிக்கயிருக் கும் ஹாலிவுட் படம் தொடங்குகிறது. அதனால் தமிழ்ப்படங்களில் நடித்துக் கொண்டே ஹாலிவுட் படத்திலும் நடிக்கயிருக்கிறேன் என்றார் தனுஷ்.
0 comments:
Post a Comment