Saturday, April 15, 2017

கள்ளம் கபடம் இல்லாத முரட்டுத்தனமான அன்பு கொண்டவர் பாரதிராஜா! -ரஜினிகாந்த் பேச்சு


கள்ளம் கபடம் இல்லாத முரட்டுத்தனமான அன்பு கொண்டவர் பாரதிராஜா! -ரஜினிகாந்த் பேச்சு



15 ஏப்,2017 - 10:32 IST






எழுத்தின் அளவு:








இயக்குனர் பாரதிராஜா தொடங்கியுள்ள பன்னாட்டு திரைப்பட பயிற்சி கல்லூரியின் தொடக்க விழா நேற்று இரவு 8 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாரதிராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, கே.பாக்ய ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், திருநாவுக்கரசர், பார்த்திபன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில்,

நான் முதல்ல பாரதிராஜாவை பாரதி என்றுதான் கூப்பிடுவேன். ஒருமுறை இளையராஜா, பாரதிராஜாவின் வயசைப்பற்றி என்னிடம் சொன்னதில் இருந்து அவரை பாரதிராஜா சார் என்றுதான் சொல்வேன். அவரது உண்மையான வயசு என்னான்னு தெரிஞ்சா அவரைப் பார்த்து கை தூக்கிறவங்க சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து விடுவார்கள். அவர் எப்படி இவ்ளோ இளமையாக இருக்கிறார் என்று சொன்னால், கிராமத்தில் கொடுத்த ஹார்கானிக் புட் அவங்க ஆத்தா கையில் சாப்பிட்ட சோறு. அது முதல் காரணம். இரண்டாவது வந்து அவர் வாசிக்கிறது, சுவாசிக்கிறது எல்லாமே சினிமா. வாழ்க்கையில் நல்லா இருக்கனும்னு சொன்னா இளமைக்காலத்துல நல்லா உழைக்கனும். முதுமையில ஆரோக்யமா இருக்கனும்னு சொன்னா பிசியாஇருக்கனும்.

பாரதிராஜா சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு என்னை பிடிக்கும் ஆனா பிடிக்காது. ஊடகங்கள்ல அவருகிட்ட ரஜினியைப்பற்றி என்ன நினைக்கிறீங்க? அப்படின்னு கேட்ட கேள்விக்கு, நல்ல மனிதன் அப்படின்னுதான் சொல்வார். ஆர்ட்டிஸ்டா என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டா? வெரி குட் மேன் என்பார். நல்ல நடிகன்னு சொல்லவே மாட்டார். என்னை பார்த்தா எப்படிய்யா? என்பார்.

உள்ளே ட்ராக் ஓடும். என்னை ஹீரோவா ஒத்துக்கல, உன்னை எப்படிய்யா ஏத்துக்கிட்டாங்க அப்படின்னு அவருக்குள்ள ஓடுறது எனக்கு கேட்குது. பாரதிராஜா இயக்கத்துல 16 வயதினிலே படத்திலேயும், அவர் தயாரித்த கொடி பறக்குது படத்திலையும் நடிச்சிருக்கேன். அதுக்குகூட கால்சீட் கேட்டு அவரு வரல. ஆனா இந்த விழாவுக்குதான் அவர் வந்து எங்கிட்ட கேட்டாரு. உடனே நான் வர்றேன்னு சொன்னேன்.

மதிப்பிற்குரிய எம்ஜிஆர் அவர்களுக்கு பாரதிராஜான்னா ரொம்ப பிடிக்கும். அவரிடம் கொஞ்சி குலாவுவார். யாருகிட்டயும் அவர் அத்தனை எளிதாக பழக மாட்டார். இவரிடம் என்னா யோய் எப்படி இருக்கிறீர்? என்று பிரியமாக பேசுவார். ஒரு ஹீரோயினியகூட நீங்க லவ் பண்ணலையா அப்படின்னு கேட்பார்.

பாரதிராஜாவிடம் கள்ளம் கபடம் இல்லாத ஒரு முரட்டுத்தனமான அன்பு. அதனால்தான் அவரை எல்லோருக்குமே பிடிக்குது. அவரே ஒரு பல்கலைக்கழகம். இப்ப முறைப்படி ஒரு நடிப்பு பயிற்சி கல்லூரியை தொடங்கியிருக்காரு. இது வந்து அவர் வாழ்க்கையிலே மிகப்பெரிய சாதனை. மிகப்பெரிய விசயம். எனக்கு வஃ இந்த தொழில் நுட்பங்கள் நிறைய தெரியாது. கமலுக்குத்தான் தெரியும். நடிகனாக ஜெயிப்பது எளிதான விசயமல்ல. சிலர் அழகாக இருப்பார்கள். கேமராவில் சுமாராக இருப்பார்கள். சிலர் நேரில் சுமாராக இருப்பார்கள். கேமராவில் அழகாக இருப்பார்கள்.

அப்படி அழகாக இருந்தாலும் ஜனங்களுக்கு பிடிக்க வேண்டும். அது ஒரு மாயை. அவங்களுக்கு பிடிச்சு போச்சுன்னா என்ன சொன்னாலும் ஏத்துக்குவாங்க. பிடிக்கலேன்னா என்ன சொன்னாலும் ஏத்துக்கு மாட்டாங்க. அது ஒரு பெரிய மாயாஜாலம். இந்த பாரதிராஜாவின் இந்த நடிப்பு இன்ஸ்டிடியூட் மிகப்பெரிய அளவில் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.


0 comments:

Post a Comment