பிளாங்க் மைண்டோடு கதை கேட்கிறேன்! -ஜோக்கர் ரம்யா பாண்டியன்
15 ஏப்,2017 - 09:47 IST
ராஜூமுருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அதையடுத்து ரெட்டைச்சுழி தாமிரா இயக்கியுள்ள ஆண்தேவதை படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்தது பற்றி ரம்யா பாண்டியன் கூறுகையில், தற்போது ஆண்தேவதை டப்பிங் போய்க்கொண்டிருக்கிறது. ஜோக்கர் படத்தை விட வித்தியாசமான வேடம். முதல் படத்தில் அதிகமாக பேசவில்லை. இந்த படத்தில் நிறைய டயலாக் பேசி நடித்திருக்கிறேன்.
என்னை வித்தியாசமான கோணத்தில் பார்க்கலாம். மேலும், அடுத்து எந்தமாதிரியான கதையில் நடிக்க வேண்டும் என்று திட்டமிடவில்லை. பிளாங்க் மைண்டோடு கதைகள் கேட்டு வருகிறேன். கதையும் பிடித்து என்னுடைய கதாபாத்திரமும் பிடித்தால் பண்ணுவேன்.ஜோக்கர் படத்தில் எனக்கு நானே டப்பிங் பேசினேன். இந்த ஆண்தேவதை படத்திலும் டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த படத்தில் எனது நடிப்பைப் பார்த்து விட்டு பயங்கரமாக பண்றியேம்மா என்று சமுத்திரகனி பாராட்டினார்.
ஜோக்கர் படத்தில் எனது நடிப்பை பார்த்து விட்டுத்தான் இந்த ஆண்தேவதை படத்திற்கு என்னை பரிந்துரை செய்தார். அதேபோல் ஆண்தேவதை டைரக்டர் தாமிராவும் ஒரு சீனில் நான் நடித்ததை பாராட்டினார். யாராவது நன்றாக நடித் தால் உடனே ஒரு சின்ன பரிசாக பணம் கொடுப்பார். அதேமாதிரி நான் நடித்த ஒரு சீனையும் பாராட்டி பரிசாக பணம் கொடுத்தார். அது எனக்கு அவார்டு கிடைத்தது போன்ற பெரிய உற்சாகத்தைக்கொடுத்தது என்கிறார் ரம்யா பாண்டியன்
0 comments:
Post a Comment