விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திபாராவில் கவுதமன் போராட்டம் - போக்குவரத்து ஸ்தம்பிப்பு
13 ஏப்,2017 - 10:37 IST
விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை, கத்திப்பாரா மேம்பாலத்தில் இயக்குநர் கவுதமன் தலைமையில் இளைஞர்கள் குறுக்கே சங்கிலியை கட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தொடரும் விவசாயிகள் தற்கொலை, தீர்க்கப்படாமல் இருக்கும் விவசாயிகள் பிரச்னை, காவிரி பிரச்னை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த வேண்டும், காவிரி மேலாண் வாரியம் அமைத்தல்... உள்ளிட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்குநர் கவுதமன் தலைமையில் சிலர் திடீரென சென்னையின் முக்கிய பாலமான கத்திபாரா மேம்பாலத்தில் குறுக்கே இரும்பு சங்கிலியில் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். திடீர் போராட்டத்தால் இங்கு பெரும் அளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் கவுதமன் உள்ளிட்ட போராட்ட குழுவினரிடம் பேசினார். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் போலீசார் அந்த இரும்பு சங்கிலியை உடைத்து எறிந்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட கவுதமன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சென்னைக்கு இந்தபாலம் தான் பிரதான பாலம். இங்கு திடீரென போக்குவரத்து முடக்கப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அந்த நெரிசல் படிப்பிடியாக குறைந்தது.
0 comments:
Post a Comment