Thursday, April 13, 2017

விஜய்-மகேஷ்பாபுவை இயக்குவது மணிரத்னம்? ஏஆர் முருகதாஸ்.?

vijay and mahesh babuதமிழ் சினிமாவில் விஜய் மாஸ் என்றால், தெலுங்கு சினிமாவில் மாஸ் மகேஷ்பாபு.


இவர்கள் இருவருரையும் இணைத்து சில வருடங்களுக்கு முன் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் மணிரத்னம்.


ராஜராஜசோழன் மற்றும் வந்தியத்தேவன் ஆகிய கேரக்டர்களில் அவர்கள் நடிப்பார்கள் என கூறப்பட்டது.


ஆனால் அது வெறும் பேச்சோடு முடிந்து விட்டது.


இந்நிலையில், மகேஷ் பாபு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது…


நாங்கள் சேர்ந்து நடிக்கணும் என்றால், அதற்கான கதையும், அதை கையாள தெரிந்த இயக்குனரும் தேவை.


அப்படியென்றால், ஏ.ஆர்.முருகதாஸ்தான் சரியாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.


ஆனால் சமீபகாலமாக சரித்திர கதைகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


எனவே பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் கையில் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

0 comments:

Post a Comment