Thursday, November 3, 2016

விஜய்க்காக தனது பட ரிலீஸை தள்ளிவைத்தாரா நிவின்பாலி..?


விஜய்க்காக தனது பட ரிலீஸை தள்ளிவைத்தாரா நிவின்பாலி..?



03 நவ,2016 - 17:19 IST






எழுத்தின் அளவு:








இந்த வருடம் 'ஆக்சன் ஹீரோ பிஜூ', 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' என இரண்டே படங்கள் மட்டுமே மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி இருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜின் அவியல் என்கிற குறும்பட குவியல் ஒன்றில் அவர் (எப்போதோ) நடித்ததிருந்ததையும், சமீபத்தில் வெளியான 'ஆனந்தம்' படத்தில் அதன் தயாரிப்பளார் வினீத் சீனிவாசன் தனது நண்பர் என்பதால் கெஸ்ட் ரோலிலும் நடித்ததையும் இந்த கணக்கில் ஏற்றவேண்டாம். தற்போது தமிழில் கௌதம் ராமச்சந்திரன் என்பவர் டைரக்சனில் அவர் நடித்து முடித்துள்ள படம் கூட வரும் 2017ல் தான் வெளியாக இருக்கிறதாம்.

அதேசமயம் 'பிரேமம்' புகழ் அல்தாப் டைரக்சனில் நிவின்பாலி நடித்துவரும் 'ஞங்களுடே நாட்டில் ஓரிடவேள' படம் இந்த வருடமே வெளியாகிவிடும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.. அதற்கேற்ற மாதிரி வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் படத்தை ரிலீஸ் பண்ணுவதற்காக வேலைகளை முடுக்கியும் விட்டிருந்தார்கள்.. ஆனால் அதே தினத்தில் விஜய்யின் 'பைரவா' படமும் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.. அப்படி வெளியானால் கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களை விஜய் படம் ஈர்த்துக்கொள்ளும்.. அதனால் தனது படத்திற்கு பாதிப்பு என்பதால் தற்போது வரும் ஜனவரி மாதத்திற்கு ரிலீஸ் தேதியை மாற்ற சொல்லிவிட்டாராம் நிவின்பாலி.


0 comments:

Post a Comment