Tuesday, April 4, 2017

அழுக்குப் பையனாக ஜி.வி.பிரகாஷ்!









அழுக்குப் பையனாக ஜி.வி.பிரகாஷ்!



04 ஏப்,2017 - 09:00 IST






எழுத்தின் அளவு:








புரூஸ்லி படத்தை அடுத்து, அடங்காதே, ஐங்கரன், 4 ஜி, சர்வம் தாள மயம், நாச்சியார் என பல படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பாபா பாஸ்கர் இயக்கத்தில் குப்பத்துராஜா என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். பூனம்பாஜ்வா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்திற்காக சென்னையிலுள்ள மோகன் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

மேலும், வடசென்னை கதையில் உருவாகி வரும் இந்த குப்பத்து ராஜா படத்தில் ஸ்லம் ஏரியாவாசியாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். கிட்டத்தட்ட கார்த்தி நடித்த மெட்ராஸ் படம் போன்ற லொகேசன்களில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படத்துக்காக அழுக்குப் பையனாக மாறியுள்ள ஜி.வி.பிரகாஷ், மேக்கப் போடாமல் லுங்கி, பனியன் கெட்டப்பில்தான் அதிகமான காட்சிகளில் நடிக்கிறாராம். முக்கியமாக, படம் முழுக்க அவர் சென்னை தமிழில் பேசுகிறாராம்.




Advertisement








பள்ளி தலைமை ஆசிரியை வேடத்தில் நடிக்கிறேன்! -தேவயானிபள்ளி தலைமை ஆசிரியை வேடத்தில் ... சிவலிங்கா படத்தில் ரித்திகா சிங்தான் பர்ஸ்ட் ஹீரோ! -லாரன்ஸ் பேச்சு சிவலிங்கா படத்தில் ரித்திகா ...










0 comments:

Post a Comment