Tuesday, May 2, 2017

அஜித்-சிவகார்த்திகேயனுடன் மோத தேதி குறித்த விஷால்

ajith sivakarthikeyanகத்தி சண்டை படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் இரு படங்கள் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளன.


விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் மற்றும் இரும்பு திரை ஆகிய இரண்டு படங்கள் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களுடன் மோதவுள்ளது.


மிஷ்கின் இயக்கியுள்ள துப்பறிவாளன் படத்தை ஆகஸ்ட் மாதம் 10ஆம் வெளியிடவுள்ளனர்.


இதே நாளில்தான் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.


அதுபோல், விஷாலின் மற்றொரு படமான இரும்பு திரை படத்தை செப்டம்பர் 29ஆம்தேதி வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதே நாளில்தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Vishal clash with Ajith and Sivakarthikeyan

0 comments:

Post a Comment