கபாலி படத்தின் சூட்டிங் மலேசியாவில் நடைபெற்ற போது, ரஜினியின் போட்டோக்கள் அதிகளவில் இணையங்களில் வெளியானது.
தற்போது அதே நிலைமைதான் காலா படத்திற்கும் ஏற்பட்டுள்ளது.
இப்படத்தில் ரஜினி, ரஞ்சித், சமுத்திரக்கனி உள்ளிட்டோரின் போட்டோக்கள் இப்போது இணையங்களில் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நெல்லை பாஷையில் ரஜினி பேசி நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதற்கு முன் வெளியான பாபநாசம் படத்தில் கமல் நெல்லை தமிழ் பேசி நடித்திருந்தார்.
விஜய் நடித்த பைரவா படமும் நெல்லையை பின்னணியாக கொண்ட கதைக்களமாக அமைந்திருந்த்து குறிப்பிடத்தக்கது.
Kaala movie connect with Papanasam and Bairavaa movie
0 comments:
Post a Comment