பிரபல தெலுங்கு தயாரிப்பாளராரும் டைரக்டருமான தசரி நாராயண ராவ் அவர்கள் சற்றுமுன் மரணமடைந்தார்.
இவர் ஆந்திராவில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
தெலுங்கில் 140 படங்களை இயக்கியுள்ள இவர், தமிழ் மற்றும் இந்தியில் படங்களை இயக்கியுள்ளார்.
50 படங்களை தயாரித்து இருக்கிறார்.
மேலும் நடனம், கதாசிரியர் ஆகிய துறைகளிலும் இவர் பணி புரிந்துள்ளார்.
டிவி சீரியல்களையும் இவர் தயாரித்துள்ளார்.
மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படத்தை தயாரிக்க இருந்தார் இவர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் சற்றுமுன் மரணமடைந்தார்.
இவரது மறைவு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Veteran Telugu filmmaker Dasari Narayana Rao dies at 75
0 comments:
Post a Comment