சிரஞ்சீவி படத்தில் அமிதாப்பச்சன்?
28 மே, 2017 - 11:40 IST
கத்தி ரீமேக்கான கைதி எண்-150 படத்திற்கு பிறகு சுதந்திர போராட்ட வீரர் உயாலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் சிரஞ்சீவி. இந்த படத்தையும் சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு நடிகருமான ராம்சரண் தேஜா தயாரிக்கிறார். சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். ரூ. 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறது. ராஜமவுலியின் பாகுபலி-2 படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியானது போன்று தனது படத்தையும் மூன்று மொழிகளில் எடுக்கிறார் சிரஞ்சீவி.
அதன் காரணமாக, இந்த படத்தில் இந்திய அளவில் பிரபலமான நடிகர் நடிகைகளை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் முதல்கட்டமாக இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனை தனது 151வது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சிரஞ்சீவி. இதற்கு முன்பு சிரஞ்சீவி நடித்த கைதி எண் 150 படத்திலேயே ஒரு வேடத்தில் நடிப்பதாக உறுதியளித்திருந்தார் அமிதாப்பச்சன். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் இந்த படத்தில் எப்படியேனும் அவரை நடிக்க வைத்து விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார் சிரஞ்சீவி. அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
0 comments:
Post a Comment