காலாவில் அஞ்சலி பாட்டீல்
27 மே, 2017 - 10:56 IST
ரஜினி நடிக்கும் காலா படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். மும்பை தாராவி பகுதியில் நடக்கும் கதையில் இவர் மும்பை பெண்ணாக நடிக்கிறார். மற்றொரு ரோலில் திருநெல்வேலியிலிருந்து மும்பை சென்று தாராவியில் வாழும் தமிழ் பெண் கேரக்டரில் நடிக்கிறார் பாலிவுட் மற்றும் மராட்டிய நடிகை அஞ்சலி பாட்டீல். இவர் ரஜினியின் தங்கையாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
மராட்டிய மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த அஞ்சலியும், ஹூமா குரேஷி போன்று விருது நடிகை. நா பங்காரு தல்லி என்ற தெலுங்கு படத்திற்காக சிறப்பு தேசிய விருது பெற்றவர். இதே படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆந்திர அரசின் நந்தி விருது பெற்றவர். வித் யூ வித்தவுட் யூ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்தற்காக கோவா திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாவில் சிறந்த நடிகை விருது பெற்றவர். டெல்லி இன் எ டே படத்திற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.
மாடல் அழகியாக வாழ்க்கையை தொடங்கிய அஞ்சலி 2011ம் ஆண்டு டெல்லி இன் எ டே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு இந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி, ஆங்கில மொழிகளில் ஏராளமான படம் நடித்துள்ளார். இப்போது காலாவில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
0 comments:
Post a Comment