ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடவிருப்பதால், அவருக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய இந்து சத்திய சேனா என்ற அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலை காரணத்தையும் மனதில் கொண்டு தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாற்றம் உண்டாக்க வேண்டும் என்ற சமூக ஆர்வத்துடன், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார்.
இதை சில அரசியல் கட்சிகள் ரஜினிகாந்த் அவர்களின் கருத்திற்கு முரண்பாடாக பேசிக்கொண்டும் மற்றும் சில அமைப்பை சார்ந்தவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் அவரது உருவபொம்மையை எரித்தும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
எனவே ரஜினிகாந்த் அவர்களுக்கும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று எங்கள் அகில இந்திய இந்து சத்திய சேனாவின் அமைப்பின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment