Wednesday, May 31, 2017

தெலுங்கானா முதல்வர் கேரக்டரில் நடிக்கும் விஜய் ஆண்டனி..?


தெலுங்கானா முதல்வர் கேரக்டரில் நடிக்கும் விஜய் ஆண்டனி..?



31 மே, 2017 - 16:02 IST






எழுத்தின் அளவு:








ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்து தெலுங்கானா என தனி மாநிலமாக மாறி, தற்போது அதன் முதலமைச்சராக சந்திரசேகர் ராவ் இருக்கிறார். தெலுங்கானாவை தனியாக பிரித்து புதிய மாநிலமாக மாற்றுவதற்காக பல போராட்டங்களை நடத்தியதில் இவரின் பங்கு அபரிமிதமானது.. சில மாதங்களுக்கு முன் இயக்குனரும் தயாரிப்பாளருமான மதுரா ஸ்ரீதர் என்பவர் சந்திரசேகர் ராவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.. தற்போது அடுத்தகட்டமாக வரும் ஜூன்-2ல் இந்தப்படத்தின் துவக்க விழாவும் நடைபெற இருக்கிறது..

சந்திரசேகர் ராவ் கேரக்டரில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம் ஹிந்தி நடிகர் ராஜ்குமார் ராவ். பல நடிகர்களை சல்லடை போட்டு சலித்ததில் சந்திரசேகர் ராவின் உருவ அமைப்புடன் பொருந்துவதாகவும் நடிப்புத்திறமை கொண்டவராகவும் இவர் இருப்பதாக இயக்குனர் மதுரா ஸ்ரீதர் முடிவு செய்தாராம். அதேசமயம் இந்தப்படம் இந்தி மற்றும் தமிழிலும் உருவாக இருக்கிறதாம். தமிழில் சந்திரசேகர் ராவ் கேரக்டரில் நடிக்க விஜய் ஆண்டனியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.


0 comments:

Post a Comment