நடிகர்கள் : அருள்நிதி, விவேக், தன்யா, எம்எஸ் பாஸ்கர், டவுட் செந்தில், எம்எஸ் பாஸ்கர், கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய், செல்முருகன் மற்றும் பலர்.
இயக்கம் : ராதாமோகன்
இசை : விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவாளர் : எம்எஸ் விவேகானந்தன்
எடிட்டர்: டிஎஸ் ஜெய்
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு : ஷான் சுதர்சன்
கதைக்களம்…
நாயகன் அருள்நிதிக்கு பேச்சும் வராது. காதும் கேளாது.
இவர் ஊட்டியில் ஒரு சலூனில் வேலை செய்து வருகிறார். அங்கு அவருடன் டவுட் செந்திலும் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு அருகாமையில் ஒரு சூப்பர் மார்கெட்டை நடத்தி வருகிறார் நாயகி தன்யா.
ஒரு சூழ்நிலையில் தன் சொந்த வேலைக்காக ஊட்டி வரும் நடிகர் விவேக் (படத்திலும் நடிகர்தான்), அருள்நிதியை சந்திக்க, இருவரும் நட்புடன் பழகுகின்றனர்.
இந்நிலையில் விவேக் மூலம் தன் காதலை அருள்நிதியிடம் வெளிப்படுத்த சொல்கிறார் தன்யா.
அருள்நிதிக்கும் தன்யாவை பிடித்திருந்தாலும் அவரது காதலை ஏற்க மறுக்கிறார்.
அவர் ஏன் மறுக்கிறார்? அதன் பின்னணி என்ன? என்ற கேள்விகளுக்கான விடையை படத்தின் கடைசி 20 நிமிடங்களில் சொல்கிறார் இயக்குனர் ராதா மோகன்.
கேரக்டர்கள்…
மௌன குரு படத்திற்கு பிறகு ஓர் அமைதியான நடிப்பை கொடுத்திருக்கிறார் அருள்நிதி.
வாய் பேச முடியாவிட்டாலும், தன் நடிப்பை பேச வைத்திருக்கிறார் அருள்நிதி.
துறுதுறுப்பான நடிப்பில் துள்ளலாக வருகிறார் தன்யா. தமிழக ரசிகர்களின் நெஞ்சத்தில் இனி இவருக்கும் ஒரு தனியிடம் உண்டு.
விவேக் பேக் டூ பார்ம். படம் முழுக்க தன் காமெடியை அள்ளித் தெளித்திருக்கிறார் விவேக்.
சினிமாவில் தான் விட்ட கேப்பில் சூரி, யோகி பாபு, ராஜேந்திரன் ஆகியோர் புகுந்திவிட்டதை ஓப்பனாகவே சொல்லியிருக்கிறார்.
இவர்களுடன் டவுட் செந்தில், எம்எஸ் பாஸ்கர், செல் முருகன், கிருஷ்ணமூர்த்தி, அக்கா ஷர்மிளா ரோஷி ஆகியோர் தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
விஷால் சந்திரசேகரின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும் ரகம்.
ஊட்டி அழகை தன் கேமராவில் அழகாய் படம் பிடித்துள்ளார் எம்எஸ் விவேகானந்தன்.
சைகை மொழியால் படம் முழுவதும் உணர்வுகளை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
சிலருக்கு அனுதாபம், சிலருக்கு அன்பு எவ்வளவு முக்கியம் என்பதை தன் நாயகன் மூலம் காட்சிகளில் உணர்த்தியிருக்கிறார் டைரக்டர்.
ஹீரோ-ஹீரோயின் காதல் கைகூடி வரும்போது, படத்தை முடிக்காமல் நீட்டியிருப்பது கொஞ்சம் சலிப்பை தட்டுகிறது.
பிருந்தாவனம்… பிடிக்கும் வனம்
0 comments:
Post a Comment