Saturday, May 27, 2017

ஆண் தேவதை கிளப்பிய ஆரோக்கியமான விவாதம்


ஆண் தேவதை கிளப்பிய ஆரோக்கியமான விவாதம்



27 மே, 2017 - 18:04 IST






எழுத்தின் அளவு:








'அப்பா' படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு சமுத்திரக்கனி நடித்து, இயக்கியுள்ள 'தொண்டன்' படம் மே 26-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது 'ஆண் தேவதை, வேலையில்லா பட்டதாரி 2, வடசென்னை, கொளஞ்சி, கூட்டத்தில் ஒருத்தன், மதுர வீரன், ஏமாலி, காலா' என ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.

இவற்றில் 'ஆண் தேவதை' படத்தை 'ரெட்டச்சுழி' படத்தை இயக்கிய தாமிரா இயக்கி வருகிறார். மறைந்த பாலசந்தரின் சிஷ்யரான தாமிரா, கே.பி. மீது கொண்ட மதிப்பின் அடையாளமாக சிகரம் சினிமாஸ் என்ற படநிறுவனம் தொடங்கி ஆண்தேவதை படத்தை ஃபக்ருதீனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.

சமுத்திரக்கனிக்கு ஜோடியாக 'ஜோக்கர்' ரம்யா பாண்டியன் நடித்துள்ளார். மேலும், கவின், கஸ்தூரி, இளவரசு, 'பூ' ராம், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்து வரும் இதற்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

ஐடியில் வேலை பார்க்கும் பலரை தற்போது வேலைநீக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன ஐடி நிறுவனங்கள். அப்படி வேலை இழந்த கணவன், ஹவுஸ் ஹஸ்பண்டாக நேர்ந்தால் என்ன நடக்கும் என்பதைப் பற்றிய படமாக ஆண் தேவதை படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

தொண்டன் படம் வெளியான அன்று ஆண் தேவதை படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியானது. ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் ஆண் தேவதை ஆரோக்கியமான விவாதத்தை கிளப்பி இருக்கிறது.


0 comments:

Post a Comment