அனுஷ்காவுக்காக காத்திருக்கும் இயக்குநர்
26 மே,2017 - 10:38 IST
பாகுபலி-2 படத்திற்கு பிறகு அந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் புதிய படங்களில் கமிட்டாகி பிசியாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் பிரபாஸ், பாகுபலி-2விற்கு பிறகு ஓய்வெடுத்து வருபவர், அடுத்த மாதம் முதல் சாஹோ படத்தில் நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து ராணா, நேனே ராஜூ நேனே மந்திரி, மடை திறந்து ஆகிய படங்களில் நடித்து வருபவர், அடுத்தபடியாக ஹீரோ-வில்லன் என இரண்டு புதிய தெலுங்கு படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
மேலும், அனுஷ்கா, பாகுபலி-2வில் நடித்து முடித்த பிறகு பாக்மதி படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் பாகுபலி-2 மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியிலும் அவர் பிரபலமாகி விட்டதால், இந்திப்பட டைரக்டர் நிவாஸ் என்பவர் ஒரு கதையை அனுஷ்காவிடம் சொல்லி இம்ப்ரஸ் செய்து விட்டாராம். ஆனபோதும், இன்னும் அந்த படத்தில் தான் நடிப்பது பற்றி எந்த பதிலும் சொல்லவில்லையாம் அனுஷ்கா. என்றாலும் அந்த கதை அனுஷ்காவுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்கிறார். மேலும் படத்தின் பட்ஜெட் போன்ற காரணங்களால் தற்காலிகமாக இந்தப்படம் ஒத்திவைக்கப்படுவதாகவும், எப்போது ஆரம்பித்தாலும் அது அனுஷ்கா நடிக்கும் படமாகத்தான் இருக்கும் என்கிறாராம் இயக்குநர் நிவாஸ்.
0 comments:
Post a Comment