விவேகம் டீசர், 18 நாட்களில் 14 மில்லியன் பார்வைகள்
30 மே, 2017 - 12:16 IST
சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிக்கும் 'விவேகம்' படத்தின் டீசர் இந்த மாதம் 11ம் தேதி வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே அடுத்தடுத்து பல சாதனைகளை இந்த டீசர் நிகழ்த்திக் காட்டியது. 'கபாலி' பட டீசரின் சாதனைகளை முறியடித்து மேலும் புதிய சாதனைகளைப் படைக்க முன்னேறிக் கொண்டிருக்கிறது.
டீசர் வெளியான 18 நாட்களில் 14 மில்லியன், அதாவது 1 கோடியே 40 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் 4 லட்சம் லைக்குகளைத் தொடுவதற்கு இன்னும் 9 ஆயிரம் லைக்குகளே தேவை. குறைந்த நாட்களில் 14 மில்லியனைப் பெற்றதும் ஒரு சாதனைதான்.
'கபாலி' டீசர் 3 கோடியே 39 லட்சம் பார்வைகளையும், 4 லட்சத்து 60 ஆயிரம் லைக்குகளையும் தன் சாதனையாக வைத்துள்ளது. இந்த சாதனைகளை முறியடிக்க 'விவேகம்' இன்னும் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்பதுதான் அடுத்த கேள்வி.
0 comments:
Post a Comment